»   »  ரம்யாவும் ரக்ஷிதாவும்!

ரம்யாவும் ரக்ஷிதாவும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
குத்து ரம்யாவும், கும்மாங்குத்து ரக்ஷிதாவும் இணைந்து நடிக்கும் கன்னடப் படத்தில்அவர்களுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் நம்ம ஊரு ஷாம்.

மலையாளத்து மாங்கனிகளும், ஆந்திரத்து அல்வாக்களும், மும்பைமங்காத்தாக்களும் கோலோச்சி வரும் தமிழ் சினிமாவில் கன்னடத்து பைங்கிளிகளும்அவ்வப்போது வந்து அலம்பி விட்டுப் போவதுண்டு.

அந்த வரிசையில் வந்தவர்கள்தான் ரம்யாவும், ரக்ஷிதாவும். குத்து படம் மூலம்தமிழுக்கு வந்த ரம்யாவுக்கு கோலிவுட் கை கொடுக்கவில்லை.

தொட்டபெட்டா ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டியும் ரம்யா இங்கு எடுபடவில்லை.இதனால் தாயகத்திற்கேத் திரும்பிப் போய் விட்டார் ரம்யா.

அதேபோலத்தான் ரக்ஷிதாவும். தம் படம் மூலம் இந்த கும் நாயகியாக தமிழுக்குவந்தார். சிம்புவுக்கு அக்கா போல அப்படத்தில் தெரிந்தாலும், கிளாமரில் கில்லிவிளையாடினார்.

மதுர படம் மூலம் விஜய்யுடன் ஜோடி போட்ட அவர் தனது பெருத்த உடம்பைவைத்து ரப்பர் ஆட்டம் போட்டும் பெரிய அளவில் வாய்ப்பு வரவில்லை. இதனால்ரக்ஷிதாவும் கன்னடத்திற்கேத் திரும்பினார்.

அங்கு முன்னணி நாயகிகளாக இருவரும் கொஞ்ச காலம் ஓட்டினார்கள். இப்போதும்பிசியாகவே இருந்து வருகிறார்கள். இந்த இருவரையும் வைத்து கன்னடத்தில் தனம்தனம் என்ற புதிய படம் உருவாகவுள்ளது.

இதில் இவர்களுக்கு ஜோடியாக ஷாம் நடிக்கிறார். தமிழில் பெரிய அளவில் வாய்ப்புஇல்லாமல் அவஸ்தைப்படும் ஷாமைத் தேடி இந்தப் படம் வந்தபோது உடனேயேஓ.கே. சொல்லி விட்டார்.

தமிழ்ப் பையனாக இருந்தாலும் ஒரு காலத்தில் பெங்களூர் வாலாவாகவும் இருந்தவர்ஷாம். வசதியான மதுரை பார்ட்டியான இவரை பெங்களூரில் தான் படிக்கவைத்தார்கள்.

கவிதா லங்கேஷ் என்பவர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

கிளாமர் இமயமலைகளுக்கு மத்தியில் நடிக்கப் போகும் ஷாம் எப்படிச் சமாளிக்கபோகிறார் என்பதுதான் நமது கவலைக்குரிய கேள்வி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil