ரம்யாவின் செகண்ட் ரவுண்ட்

By Staff
கொஞ்ச காலம் கோலிவுட்டில் கும்மாட்டம் போட்டுவிட்டுப் போன குத்து ரம்யாமீண்டும் தமிழுக்கு வருகிறார்.

முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினரான (பேத்தி முறை)ரம்யா, தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக குத்து படம் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே கவர்ச்சியில் ரசிகர்களை மயக்கிய ரம்யா, அதன் பின்னர் தனதுஊரைச் சேர்ந்த அர்ஜூனுடன் கிரி படத்தில் கிளாமரில் கிறங்கடித்தார். அப்புறம்ஏனோ காணாமல் போய் விட்டார்.

தமிழில் அவர் நடிக்காவிட்டாலும் கூட தாய் மொழியான கன்னடத்திலும்,தெலுங்கிலும் அம்மணி படு பிசியாகத்தான் இருக்கிறார்.

இந் நிலையில் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த ஜோகி படம் மிகப் பெரியவெற்றியை பெற்றது, வசூலையும் வாரிக் குவித்தது.

இப்போது ஜோகி தமிழுக்கு வருகிறது. நடிக்கவிருப்பவர் தனுஷ். அவருக்குஜோடியாக ரம்யா நடிக்கவுள்ளார். இந்தப் படம் மூலம் தமிழ் ரசிகர்களை மீண்டும்கவர ஆவலாக உள்ளார் ரம்யா.

புதுப்பேட்டை படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதில் தனுஷின்நடிப்பைப் பார்த்து வெகுவாகப் பாராட்டிவிட்டு கன்னடத்தில் ஹிட் ஆன ஜோகியைப்பற்றிக் கூறி அந்தப் படத்தை நீங்களே தமிழில் செய்யுங்கள் என்றும்பரிந்துரைத்தாராம்.

இதையடுத்தே ஜோகியை தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள்.

தனுஷுடன் நடிக்கவிருப்பதால் சந்தோஷமாக இருக்கும் ரம்யா சமீபத்தில் தெலுஙகுப்படமான அபிமன்யூவில் ரொம்பக் குறைச்சலான கிளாமர் காட்டி நடித்தார்.

அதனாலோ என்னவோ படம் எடுபடவில்லை. இதனால் சோர்ந்து போயிருந்தரம்யாவுக்கு தமிழில் ரீ-எண்ட்ரி கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாம்.


கிளாமர், சோகம், ஆக்ஷன் என எல்லாவிதமான ரோல்களிலும் நடிக்கஆசைப்படுவதாகக் கூறும் ரம்யா, நடிப்பு முழுவதுமாக அலுத்த பிறகுதான் கல்யாணம்பண்ணுவாராம்.

சீக்கிரமே அலுத்தால் சினிமாவுக்கு நல்லது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X