வந்தாரய்யா ரம்யா வந்தாரய்யா... குத்து படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக வந்து தனது கவர்ச்சியால் ரசிகர்களின் நெஞ்சில் குத்தினாரே திவ்யாஸ் பந்தனாஸ்..நினைவிருக்கிறதா.இவரது பெயர் தமிழ் கூறு நல்லுலகில் உள்ளவர்களுக்கு வாயில் நுழைவது கஷ்டம் என்பதால் அதை ரம்யா என்று மாற்றினார்கள்.கர்நாடக மாஜி முதல்வரும் இப்போதைய மகாராஷ்டிர கவனர்னருமான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தூரத்து பேத்தி இவர்.முதல்வராக இருந்த கிருஷ்ணாவின் வீட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றவர் கன்னட சினிமா விவிஐபிக்களின் கண்ணில் பட அங்குஹீரோயினானார். அவரைத் தான் சிம்பு கோலிவுட்டுக்குக் கொண்டு வந்தார்.ஆனால், வெறும் கவர்ச்சி மட்டுமே தெரியும். சாஸ்திரத்துக்குக் கூட நடிக்க வராது என்பதால் முதல் படத்திலேயே இவர்தேறவில்லை. படமும் பெரிய அளவில் வெல்லவில்லை. இதனால் அவரை மறந்துவிட்டார்கள் கோடம்பாக்கத்தார். இப்போது தாய் மொழியான கன்னடத்தில் போட்டுத் தாக்கி வருகிறார் ரம்யா. சமீபத்தில் இவர் நடித்த அமிர்ததாரே என்றகன்னடப் படத்தில் பிக் பி அமிதாப் நடித்துள்ளார். படம் எதிர்பாராதவிதமாக சூப்பர் ஹிட் ஆகி விட ரம்யாவுக்கும் சேர்த்துஅடித்தது லக்.இப்போது நிறையப் படங்களாம் அவரது கையில். இந் நிலையில் தான் ரம்யாவை வம்படியாக மீண்டும் தமிழுக்கு இழுந்துவந்திருக்கிறார்கள்.காக்கி என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக இவர் நடிக்கிறார். இவர் தவிர இன்னொரு ஜோடியாக தீபு என்ற ஜான்விநடிக்கிறார் (வயசானாலேயே நம்ம ஹீரோக்களுக்கு 2,3 ஜோடி தேவைப்பட்டுவிடும், அதிலும் சின்னஞ் சிறுசுகளைத் தான்தேடுவார்கள்)இந் நிலையில் ரம்யா கொடுத்துள்ள பேட்டியில், நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை. சில படங்களில் ஆபாசமான கவர்ச்சி காட்ட வாய்ப்புவந்தது. ஆனால் மறுத்து விட்டேன். அதில் எனக்கு உடன்பாடு இல்லை (அப்ப குத்து, கிரியில் காட்டியது என்னவாம்?முதலில் நான் ஒரு பெண். ஒரு பெண்ணே பெண்ணை இழிவுபடுத்துவது போன்ற கிளாமர் காட்சிகளில் நடிப்பதை என்னால் ஏற்கமுடியாது (ஜோரா கை தட்டுங்கப்பா...) எனவேதான் சில பட வாய்ப்புகளை நானே ஒதுக்கி விட்டேன் (முடிஞ்சா, ஒரு ஓபோடுங்க).இப்போது சரத்குமாருடன் காக்கி படத்தில் நடிக்கிறேன். ஏற்கனவே ஐயா படத்திலும் சரத் சாருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்புவந்தது. ஆனால் அது முடியாமல் போய் விட்டது. அதற்கும் சேர்த்து இப்போது காக்கியில் கலக்கி வருகிறேன்.தமிழ் சினிமாவில் சிம்பு, சரத்குமார், அர்ஜூன் என முக்கியமான ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து விட்டேன் (இவங்க மூணுபேரும் முன்னணி ஹீரோவா?) அதில் சிம்புவை மறக்கவே முடியாது. ஆள் பார்க்கத்தான் சின்னப் புள்ளைக் கணக்காக இருக்கிறார். ஆனால் படாகுறும்புத்தனமானவர், குழந்தைத்தனமானவர். விளையாட்டுப் பிள்ளை.. (அவர் தான் மன்மதனாச்சே).அதேபோல அர்ஜூனும். அவரும், நானும் கன்னடர்கள். அவரது கிரி படத்தில் நடித்தபோது கன்னடத்தில் பேசி, மகிழ நல்லவாய்ப்பாக இருந்தது.இப்போதைக்கு எனக்கு ஒரே ஒரு ஆசை, எங்க ஊர்க்காரரான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும்.குத்து ரம்யாவுக்கு கன்னடம் தாய் மொழி என்றாலும் அவர் ஊட்டி, சென்னையில் படித்துள்ளார். அதனால் தமிழிலும் எழுதப்படிக்கத் தெரியுமாம். அது மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, இந்தியும் கூடுதலாக தெரியுமாம்.அப்ப பொழப்புக்குப் பிரச்சினை இல்லை!

By Staff

குத்து படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக வந்து தனது கவர்ச்சியால் ரசிகர்களின் நெஞ்சில் குத்தினாரே திவ்யாஸ் பந்தனாஸ்..நினைவிருக்கிறதா.

இவரது பெயர் தமிழ் கூறு நல்லுலகில் உள்ளவர்களுக்கு வாயில் நுழைவது கஷ்டம் என்பதால் அதை ரம்யா என்று மாற்றினார்கள்.கர்நாடக மாஜி முதல்வரும் இப்போதைய மகாராஷ்டிர கவனர்னருமான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தூரத்து பேத்தி இவர்.

முதல்வராக இருந்த கிருஷ்ணாவின் வீட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றவர் கன்னட சினிமா விவிஐபிக்களின் கண்ணில் பட அங்குஹீரோயினானார். அவரைத் தான் சிம்பு கோலிவுட்டுக்குக் கொண்டு வந்தார்.

ஆனால், வெறும் கவர்ச்சி மட்டுமே தெரியும். சாஸ்திரத்துக்குக் கூட நடிக்க வராது என்பதால் முதல் படத்திலேயே இவர்தேறவில்லை. படமும் பெரிய அளவில் வெல்லவில்லை. இதனால் அவரை மறந்துவிட்டார்கள் கோடம்பாக்கத்தார்.


இப்போது தாய் மொழியான கன்னடத்தில் போட்டுத் தாக்கி வருகிறார் ரம்யா. சமீபத்தில் இவர் நடித்த அமிர்ததாரே என்றகன்னடப் படத்தில் பிக் பி அமிதாப் நடித்துள்ளார். படம் எதிர்பாராதவிதமாக சூப்பர் ஹிட் ஆகி விட ரம்யாவுக்கும் சேர்த்துஅடித்தது லக்.

இப்போது நிறையப் படங்களாம் அவரது கையில். இந் நிலையில் தான் ரம்யாவை வம்படியாக மீண்டும் தமிழுக்கு இழுந்துவந்திருக்கிறார்கள்.

காக்கி என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக இவர் நடிக்கிறார். இவர் தவிர இன்னொரு ஜோடியாக தீபு என்ற ஜான்விநடிக்கிறார் (வயசானாலேயே நம்ம ஹீரோக்களுக்கு 2,3 ஜோடி தேவைப்பட்டுவிடும், அதிலும் சின்னஞ் சிறுசுகளைத் தான்தேடுவார்கள்)

இந் நிலையில் ரம்யா கொடுத்துள்ள பேட்டியில்,


நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை. சில படங்களில் ஆபாசமான கவர்ச்சி காட்ட வாய்ப்புவந்தது. ஆனால் மறுத்து விட்டேன். அதில் எனக்கு உடன்பாடு இல்லை (அப்ப குத்து, கிரியில் காட்டியது என்னவாம்?

முதலில் நான் ஒரு பெண். ஒரு பெண்ணே பெண்ணை இழிவுபடுத்துவது போன்ற கிளாமர் காட்சிகளில் நடிப்பதை என்னால் ஏற்கமுடியாது (ஜோரா கை தட்டுங்கப்பா...) எனவேதான் சில பட வாய்ப்புகளை நானே ஒதுக்கி விட்டேன் (முடிஞ்சா, ஒரு ஓபோடுங்க).

இப்போது சரத்குமாருடன் காக்கி படத்தில் நடிக்கிறேன். ஏற்கனவே ஐயா படத்திலும் சரத் சாருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்புவந்தது. ஆனால் அது முடியாமல் போய் விட்டது. அதற்கும் சேர்த்து இப்போது காக்கியில் கலக்கி வருகிறேன்.

தமிழ் சினிமாவில் சிம்பு, சரத்குமார், அர்ஜூன் என முக்கியமான ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து விட்டேன் (இவங்க மூணுபேரும் முன்னணி ஹீரோவா?)


அதில் சிம்புவை மறக்கவே முடியாது. ஆள் பார்க்கத்தான் சின்னப் புள்ளைக் கணக்காக இருக்கிறார். ஆனால் படாகுறும்புத்தனமானவர், குழந்தைத்தனமானவர். விளையாட்டுப் பிள்ளை.. (அவர் தான் மன்மதனாச்சே).

அதேபோல அர்ஜூனும். அவரும், நானும் கன்னடர்கள். அவரது கிரி படத்தில் நடித்தபோது கன்னடத்தில் பேசி, மகிழ நல்லவாய்ப்பாக இருந்தது.

இப்போதைக்கு எனக்கு ஒரே ஒரு ஆசை, எங்க ஊர்க்காரரான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும்.

குத்து ரம்யாவுக்கு கன்னடம் தாய் மொழி என்றாலும் அவர் ஊட்டி, சென்னையில் படித்துள்ளார். அதனால் தமிழிலும் எழுதப்படிக்கத் தெரியுமாம். அது மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, இந்தியும் கூடுதலாக தெரியுமாம்.

அப்ப பொழப்புக்குப் பிரச்சினை இல்லை!

Read more about: ramya is back in kollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X