»   »  மீண்டும் நீலாம்பரி ரம்யா!

மீண்டும் நீலாம்பரி ரம்யா!

Subscribe to Oneindia Tamil

நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் 3வது ரவுண்டுக்கு ரெடியாகி வருகிறார். இதற்காக தளதளத்துப் போயிருந்த உடலின் சில பகுதிகளை சரி செய்யும்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

வயசு ஐம்பதைத் தாண்டினாலும் கூட படு ரொமான்டிக்கான ரோல்களில் நடித்து ரசிகர்களை பயமுறுத்துவது ஹீரோக்களின் வழக்கம். ஆனால்நடிகைகளுக்கு அவர்கள் அளவுக்கு ஆயுசு கிடையாது. அதிகபட்சம் ஒரு பத்து வருடம்தான் டைம் கொடுக்கிறார்கள் நமது சினிமாவில்.

ஆனால் இவர்களில் ஒரு சில ஹீரோயின்கள் விதிவிலக்காக அமைவார்கள். அதே இளமையுடன், அதே எழிலுடன், துடிப்புடன் இருப்பவர்கள்ஒரு சிலர்தான். அவர்களில் ரொம்ப ரொம்ப விசேஷமானவர் ரம்யா கிருஷ்ணன்.

அவரது வயதில் பாதி வயது உடைய ஹீரோக்களுடன், படு துள்ளலாக ஆடிப் பாடி அசத்தியவர் ரம்யா கிருஷ்ணன். படையப்பாவுக்கு முன் ரம்யாகிருஷ்ணன், தமிழில் சோடை போனவர், ஆனால் தெலுங்கில் படு டாப்பாக கலக்கியவர்.

படையப்பாவுக்குப் பிறகு அவரது இரண்டாவது இன்னிங்ஸ் படு ஜாலியாக போனது. வயதைக் கடந்தும் துள்ளும் இளமையுடன் கில்லி போலஆடிப் பாடிய ரம்யா கிருஷ்ணன், படு பிசியாக இருந்தார்.

இந்த நிலையில்தான் தெலுங்குப் பட இயக்குநர் கிருஷ்ண வம்சியைக் கல்யாணம் செய்து கொண்டு, சூட்டோடு சூடாக ஒரு குட்டிப் பாப்பாவையும்பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அவரை அதிகம் காண முடியவில்லை.

இப்போது 3வது இன்னிங்ஸுக்கு ரெடியாகி வருகிறாராம் ரம்யா கிருஷ்ணன். மறுபடியும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டும் ரம்யா கிருஷ்ணன்இடையில் விழுந்த கேப்பால், உடலில் விழுந்து விட்ட சில டயர்களை சரி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.

தினமும் ஜிம்முக்குப் போய் உடம்பை மெருகேற்ற ஆரம்பித்துள்ள ரம்யா விரைவில் மறுபடியும் ரசிகர்களை லயிக்க வைக்க வரப் போகிறாராம்.

அடுத்து, காதம்பரியா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil