காலம் மாறிப்போச்சு.. கவர்ச்சிக்கு நான் ரெடி.. ஒரே நைட்டில் சம்பளத்தை உயர்த்தி நடிகை கொடுத்த ஷாக்!

மும்பை: பாலிவுட் சினிமாவில் ஒருவரின் அதிர்ஷ்டம் ஒரே இரவில் டோட்டலாக மாறிவிடும். பல பாலிவுட் நட்சத்திரங்கள் வெற்றிப் படங்களில் நடித்துவிட்டு தங்களின் நட்சத்திர அந்தஸ்தைத் தக்கவைக்கப் போராடி வருவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இது தொடர்பான பல செய்திகள் தினமும் வெளிவந்தவண்ணம் உள்ளது. பல பாலிவுட் நட்சத்திரங்கள் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் இருந்து விலகி தங்கள் சொந்த தொழில் பக்கம் நடையைக் கட்டிய செய்திகளும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையிலையில் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற நிலையில் நடிகை திரிப்தி திம்ரி தனது சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியுள்ளார்.

பெரும்பாலான நடிகர்கள், திரைப்படம் அல்லது தொலைக்காட்சித் துறைகளில் இருந்தாலும், தங்கள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சிலர் ஒன்றன் பின் ஒன்றாக படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றுவிடுகின்றார்கள். ஆனால் ஒருசிலருக்கு ஒரு நிகழ்ச்சி அல்லது படத்திற்காக வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கிக் கொண்டு உள்ளார்கள். பல நட்சத்திரங்கள், அவர்களின் செலவுகளை கூட சமாளிக்க மிகவும் கடினமான நிலையை எதிர்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் பெரும் சிக்கலினை எதிர்கொள்கின்றனர். சில நடிகைகள் தங்களுக்கான மார்க்கெட் மதிப்பு ஓவர் ஆனவுடன் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்து விடுகின்றார்கள்.

tripti dimri ranbir kapoor animal movie

பாலிவுட்டில் பலர் இப்படி இருக்க, ஒரு படத்தில் சுமார் அரை மணி நேரம் நடித்து, ஒரே இரவில் பாலிவுட் இண்டஸ்ட்ரியில் பிரபலமான ஒரு நடிகை என்றால் அது, திரிப்தி திம்ரிதான். தொடக்கத்தில் ஒரு படத்திற்கு 40 லட்சம் சம்பளமாக பெற்ற நடிகை தற்போது ரூபாய் 10 கோடி கேட்கிறாராம். திரிப்தி திம்ரி, ரன்பீர் கபூரின் 'அனிமல்' படத்தில் ஓவர் கிளாமரில் நடித்திருந்தார். படத்தில் திரிப்தி திம்ரி மற்றும் ரன்பீர் கபூரின் கெமிஸ்ட் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

tripti dimri ranbir kapoor animal movie

சம்பளம்: அனிமல் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் கலக்க ஆரம்பித்தது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்டவர்களின் நடிப்பிற்காக இப்படம் பாராட்டப்பட்டது. படத்தில் ரன்பீருடன் திரிப்தி டிம்ரியின் கிளாமர் காட்சிகளை ரசிகர்கள் பெரிதும் பாராட்டினர். அனிமல் வெளியானதைத் தொடர்ந்து பேட் நியூஸ் படத்தில் நடிக்க திரிப்தி திம்ரி ரூபாய் 80 லட்சம் சம்பளம் பெற்றார். இந்தப் படமும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதால், பேட் நியூஸ் படத்திற்குப் பின்னர் அவர் தனது சம்பளத்தை ரூபாய் 6 கோடியாக உயர்த்தியதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கின.

tripti dimri ranbir kapoor animal movie

பலமடங்கு: இருப்பினும், தற்போதைய வெற்றியின் காரணமாக திரிப்தி திம்ரி தனது சம்பளத்தை ரூபாய் 10 கோடியாக உயர்த்தியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ, பூல் புலையா 3 மற்றும் தடக் 2 ஆகிய படங்கள் இவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது. விக்கி வித்யா கா வோ வாலா படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது, அதில் அவர் ராஜ்குமார் ராவுடன் இணைந்து நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லருக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரூபய் 40 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை திரிப்தி திம்ரி ஒரு படத்தின் வெற்றியின் மூலம் ரூபாய் 80 லட்சமாக உயர்த்தினார். அதன் பின்னர் ரூபாய் 6 கோடியாகவும் ரூபாய் 10 கோடியாகவும் தனது சம்பளத்தை உயர்த்தியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tripti dimri ranbir kapoor animal movie

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X