அது மட்டும் நடந்தா.. கங்கனா நடிக்கிறதையே நிறுத்திடுவா.. சர்ச்சையை கிளப்பிய ரங்கோலியின் சேலஞ்ச்!

மும்பை: நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சாண்டல் பாலிவுட் திரையுலகிற்கு ஒரு புதிய சவாலை விடுத்துள்ளார்.

Recommended Video

இரண்டாம் தாரமாக போகும் பிரபல நடிகை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்.. அசத்தல் அப்டேட்ஸ்!

ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரனாவத், பாலிவுட்டில் கிரிஷ், குயின், மணிகர்ணிகா என பல பெரிய படங்களில் நடித்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

ஓபன் சேலஞ்ச்

ஓபன் சேலஞ்ச்

இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தின் வாய்ஸாக செயல்பட்டு வரும் அவரது அக்கா ரங்கோலி சாண்டல், பாலிவுட் திரையுலகிற்கு ஒரு புதிய சவாலை விடுத்து இன்னொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். பாகி 3 இயக்குநர் கபீர் கான் போட்ட ட்வீட்டை தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

என்ன சவால்?

என்ன சவால்?

கங்கனா ரனாவத்தை போல பிற, பாலிவுட் நடிகைகள், ஹீரோக்கள் துணையின்றி, 60 முதல் 100 கோடி பட்ஜெட்டில் படம் நடித்து, அதனை பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கி காட்ட முடியுமா? என்ற ஓபன் சேலஞ்சை தான் தற்போது நடிகை கங்கனா ரனாவத்தின் தங்கையான ரங்கோலி சாண்டல் விடுத்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

கங்கனா நடிக்கமாட்டார்

கங்கனா நடிக்கமாட்டார்

மேலும், பாலிவுட் நடிகைகள் இந்த சவாலில் ஜெயித்துக் காட்டினால், அதன் பிறகு தனது சகோதரியான கங்கனா ரனாவத் சினிமாவில் நடிப்பதையே நிறுத்தி விடுவார் என பெரிய குண்டையும் தூக்கிப் போட்டுள்ளார். மணிகர்ணிகா படத்தை வீம்புக்கு எடுத்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளார் கங்கனா என்ற கபீர் கானின் கமெண்ட்டுக்கு பிறகே, ரங்கோலி இப்படியொரு சேலஞ்சை அறிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகைகள்

பாலிவுட் நடிகைகள்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, டாப்ஸி உள்ளிட்ட பல நடிகைகள், ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து ஹீரோக்களுக்கு சமமாக கோலோச்சி வரும் நிலையில், ரங்கோலி சாண்டல் தனது தங்கை கங்கனா மட்டும் தான் சிறந்த நடிகை எனும் ரேஞ்சில் பேசியிருப்பது பாலிவுட்டில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். அந்த படத்தைத் தொடர்ந்து, தாக்கட் மற்றும் தேஜஸ் உள்ளிட்ட படங்களிலும் கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகி உள்ளார். கங்கனா நடிப்பில் ஜனவரியில் வெளியான பாங்கா படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X