For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நடிகை ராணி முகர்ஜி இத்தனை கோடிக்கு புதிய வீடு வாங்கி இருக்கிறாரா? ஆச்சர்யத்தில் பாலிவுட்!

  |

  மும்பை: கமல்ஹாசனின் ஹேராம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி பல கோடி மதிப்பில் புதிய வீடு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  சமீப காலமாக மீடியா வெளிச்சம் படாமல் இருந்து வந்த நடிகை ராணி முகர்ஜி மீது மீண்டும் மிகப்பெரிய லைம் லைட் விழுந்துள்ளது.

  கொரோனா காலத்தில் திடீரென ஏகப்பட்ட பாலிவுட் நடிகர்கள் இப்படி புதுசு புதுசா வீடு வாங்கி அதில் முதலீடு செய்கிறார்களே என்ன விஷயமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பத் தொடங்கி உள்ளனர்.

  காஃபி வித் சூர்யா...பிரபல நடிகை பகிர்ந்த வைரல் ஃபோட்டோ காஃபி வித் சூர்யா...பிரபல நடிகை பகிர்ந்த வைரல் ஃபோட்டோ

  ராணி முகர்ஜி

  ராணி முகர்ஜி

  1996ம் ஆண்டு வெளியான பையர்புல் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ராணி முகர்ஜி. 1998ம் ஆண்டு வெளியான குச் குச் ஹோதா ஹை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் நடித்ததற்காக ஏகப்பட்ட விருதுகளையும் நடிகை ராணி முகர்ஜி பெற்றார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்து வந்தார்.

  ஹே ராம்

  ஹே ராம்

  தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் அப்போதே உருவான கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராணி முகர்ஜி. பாபுல், பாம்பே டாக்கீஸ், மர்தானி, தோடா பியார் தோடா மேஜிக் என ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து வந்த இவர், கடைசியாக 2019ம் ஆண்டு மர்தானி 2 படத்தில் நடித்து விருதுகளை அள்ளினார்.

  புதிய வீடு

  புதிய வீடு

  மேலும், இரு படங்களில் நடித்துள்ள 43 வயது நடிகை ராணி முகர்ஜி மும்பையின் கர் பகுதியில் புதிதாக சொகுசு வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக வெளியான தகவலால் ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களின் பார்வையும் தற்போது நடிகை ராணி முகர்ஜி மீது தான் என்கின்றனர்.

  எத்தனை கோடி

  எத்தனை கோடி

  கடந்த மார்ச் 31ம் தேதி அந்த குடியிருப்பை பதிவு செய்த நடிகை ராணி முகர்ஜி கடந்த ஜூலை 15ம் தேதி வீட்டை வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1485 சதுர அடி கொண்ட அந்த வீட்டின் விலை மொத்தம் 7.12 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஒன்பது முதல் பத்து கோடி மதிப்பு கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பை பேரம் பேசி 7.12 கோடிக்கு முடித்திருக்கிறார் ராணி முகர்ஜி என்றும் கூறப்படுகிறது.

  அரபிக் கடலோரம்

  அரபிக் கடலோரம்

  22வது மாடியில் இரண்டு கார் பார்க்கிங் வசதிகளுடன் 1485 சதுர அடிக்கு நடிகை ராணி முகர்ஜி வாங்கிய வீட்டின் பால்கனியில் இருந்து பார்த்தால் அரபிக் கடலே அழகாக தெரியும் அளவுக்கு இருக்கிறது என்கிற ஹாட் அப்டேட்களும் கிடைத்துள்ளன.

  5 கோடி

  5 கோடி

  பாலிவுட்டின் ஹாட்டான இளம் நடிகை திஷா பதானியும் அதே குடியிருப்பில் ஒரு போர்ஷனை ரூ. 5 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களாக மாறியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும், கிரிக்கெட் வீரர்கள் பாண்டியா சகோதரர்களும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார்களாம்.

  அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  ஆனால், புதிதாக வீடு வாங்கியது தொடர்பாக நடிகை ராணி முகர்ஜி இதுவரை சமூக வலைதளங்களில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையோ புகைப்படத்தையோ வெளியிடவில்லை. மீடியா வெளிச்சத்தை தவிர்ப்பதற்காகவே ரகசியமாக அதனை கையாண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

  அமிதாப் டு சன்னி லியோன்

  அமிதாப் டு சன்னி லியோன்

  பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஆலியா பட், சன்னி லியோன், அஜய் தேவ்கன் என ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக புதிது புதிதாக வீடுகளை வாங்கி வரும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ஏகப்பட்ட வீடுகளை வைத்திருக்கும் நடிகர்கள் திடீரென புதிய வீடுகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

  ரசிகர்கள் சந்தேகம்

  ரசிகர்கள் சந்தேகம்

  கொரோனா பரவல் காலத்தில் வீடுகள் குறைவான விலைக்கு தள்ளி விடப் படுகிற நிலையில், இப்படி திடீரென பல முன்னணி பாலிவுட் பிரபலங்களும் இப்படி வீடுகளை வாங்கி முதலீடு செய்வதற்கு பின்னணியில் வேறு ஏதாவது வில்லங்கம் இருக்குமா? என்கிற சந்தேகத்தையும் நெட்டிசன்கள் கிளப்பி வருகின்றனர்.

  English summary
  Popular Bollywood actress Rani Mukerji buys a costlies apartment near Mumbai is the talk of the town in Bollywood.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X