ஹீரோயின்
பூப்பூக்கும் ஒசை , ராக்கிளிப்பாட்டு, கல்லூரி மலர்கள், என்று பத்துக்கும் மேற்பட்ட பெயர்களை மாற்றி மாற்றி வைத்து இறுதியில் , சினேகிதியே(இனி மாறாது என்று நம்புவோம்) என்று தான் லேட்டஸ்டாக இயக்கும் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர் ப்ரியதர்ஷன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் நேரடியாகத் தயாரிக்கப்பட்டு வரும் இந்தப்படத்தில் கதாபாத்திரங்கள் எல்லாமேபெண்கள் தான்.
ஜோதிகா, தபு, சர்பாணி முகர்ஜி, மூவரும் இணைந்து நடிக்கிறார்கள். சர்பாணி முகர்ஜி..யார் தெரியுதா? காதக் கிட்டக் கொண்டு வாங்க. அவரேதான், ராணிமுகர்ஜியின் தங்கை. ப்ரியதர்ஷன் சார், பேசாம லேடிஸ் பெஷல்னு டைட்டிலை வச்சிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications