பிந்து மாதவியை நடிக்கக் கூப்பிடாதீங்க.. பஸ்ல தொங்கிய மாணவர்களை அடிவெளுத்த ரஞ்சனா நாச்சியார் பகீர்!

சென்னை: எல்லா நடிகைகளும் நயன்தாராவாக மாறிவிடுகின்றனர் என்றும் பிந்து மாதவியை எல்லாம் படத்தில் நடிக்கக் கூப்பிடாதீங்க என துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் கொந்தளித்து பிரஸ்மீட்டில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா தொடர்ந்து பட புரமோஷன்களை தவிர்த்து வரும் நிலையில், அவர் பாணியை மற்ற நடிகைகளும் பின்பற்றி வருகின்றனர் என்கிற பஞ்சாயத்து சமீப காலமாக எழுந்துள்ளது.

இன்று வெளியான மாயன் படத்தின் பிரஸ்மீட்டில் அந்த படத்தில் நடித்த ரஞ்சனா நாச்சியார் கங்குவா படத்தை கதறவிட்டதை போல இந்த படத்தை மோசமான விமர்சனம் சொல்லி கதறவிடாதீங்க என்றும் பிந்து மாதவியை எல்லாம் நடிக்கக் கூப்பிடாதீங்க என்றும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

bindu madhavi mayan ranjana nachiyar

பஸ்ல தொங்கியவர்களை அடிச்சாரே: சில மாதங்களுக்கு முன்னர் பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த மாணவர்களை பேருந்தை நிறுத்திவிட்டு ஓடிப்போய் அடித்து பரபரப்பை கிளப்பியவர் தான் இந்த துணை நடிகை ரஞ்சனா நாச்சியார். டிரைவர் மற்றும் நடத்துனரிடம் அத்துமீறி நடந்துக் கொண்டார் என இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்றது.

சொர்க்கவாசல் படத்துடன் போட்டி: சித்தார்த்தின் மிஸ் யூ படம் சென்னையில் மழை இருக்கு என்று தெரிந்ததுமே தியேட்டர்களுக்கு மிஸ் யூ சொல்லிவிட்டு போஸ்ட்போன் செய்து விட்டனர். அதை தாண்டி இன்று தியேட்டர்களில் ஆர்ஜே பாலாஜியின் சொர்க்கவாசல், பரமன், சாதுவன், மாயன், சைலன்ட், திரும்பிப்பார், குணா ரீ ரிலீஸ், பைரதி ரணகல் தமிழ் டப்பிங், செல்வந்தன் ரீ ரிலீஸ் என இன்று மட்டும் சுமார் 9 படங்கள் வெளியாகி உள்ளன. இதில், ஆர்ஜே பாலாஜி படத்தை தவிர குணா ரீ ரிலீஸ் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு சற்று இருப்பதாக கூறுகின்றனர். பல சிறு பட்ஜெட் படங்கள் இன்று வெளியான நிலையில், அதில் மாயன் படமும் சொர்க்கவாசல் படத்துக்குப் போட்டியாக வெளியாகி இருக்கிறது.

பிந்து மாதவியை நடிக்க கூப்பிடாதீங்க: ராஜேஷ் கண்ணன் இயக்கத்தில் வினோத், பிந்து மாதவி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாயன் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான 2012 படத்தை போல மாயன் காலண்டர் கணிப்பு படி உலகம் அழிந்துவிடும் என்கிற கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக பிந்து மாதவி நடித்த நிலையில், புரமோஷனுக்கு அவர் வராததால் படத்தில் துணை நடிகையாக நடித்த ரஞ்சனா நாச்சியார் ஆத்திரமடைந்து எல்லோரும் தங்களை நயன்தாரான்னு நினைக்கிறாங்க, இவங்களை போல நடிகைகளை படங்களில் நடிக்கக் கூப்பிடாதீங்க, எல்லாத்துக்கும் சேர்த்து தானே பணம் வாங்குறீங்க என பொங்கியுள்ளார்.

bindu madhavi mayan ranjana nachiyar

பிந்து மாதவிக்கு வாய்ப்புகளே குறைவு: தேசிங்குராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கழுகு என ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பிந்து மாதவிக்கு அதன் பின்னர் பட வாய்ப்புகளே கிடைக்காத நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் முதல் சீசனில் 4வது ரன்னர் அப்பாக வந்த அவர் தெலுங்கு பிக் பாஸ் நான் ஸ்டாப் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னரானார். ஆனால், அதன் பிறகும் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், குறைந்த பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். இந்த மாயன் படமே 2022ம் ஆண்டு அவர் நடித்த படம் தான் என்றும் பகைவனுக்கு அருள்வாய் எனும் படம் மட்டுமே அவர் நடிப்பில் வெளியாகாமல் தேங்கியிருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரியா பவானி சங்கரை தொடர்ந்து பிந்து மாதவியும் புரமோஷனுக்கு வரவில்லை என்கிற குற்றச்சாட்டை படக்குழுவினரே வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X