»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

முதலில் மாட்டேன் என்று மறுத்தார். கால்ஷீட் கேட்டு வந்த தயாரிப்பாளரைத் திட்டி துரத்திவிட்டார்.

கல்யாணமாய்ட்டா தாத்தா நடிகர்களுக்குக் கூட அக்காவா, அண்ணியா தான் நடிக்கனுமா? கல்யாணம் ஆனாலும்ஹீரோயினா நடிக்க முடியாதா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு தயாரிப்பாளரை விரட்டியடித்தவர்தான் ரஞ்சிதா.

அப்புறம் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ ஆஹா எத்தனை அழகு படத்தில் இளம் ஹீரோ மிதுனுக்குஅண்ணியாக நடிக்க ஒப்புக் கொண்டார். விசாரித்ததில் சம்பளத்தை ஏத்திக் கொடுத்து அவரை தயாரிப்பாளர்வளைத்ததாகத் தெரியவந்தது.

இப்போது அதைத் தொடர்ந்து மேலும் சில படங்களிலும் ரஞ்சிதாவுக்கு சான்ஸ் அடித்துள்ளது. எல்லாமே அண்ணி,அக்கா வேடம் தானாம்.

ஆஹா எத்தனை அழகு படத்தில், அழகான அண்ணி என்பதால் ரஞ்சிதாவை ரசிகர்கள் நன்றாகவே ரசிப்பதாகஅவருக்கு தகவல்களும் வந்துள்ளதாம்.

இதனால், எவ்வளவு துக்கடா வேடம்னாலும் ஓ.கேப்பா, அட்வான்ஸைக் குடுங்க என்று தயாரிப்பாளர்கள்வட்டாரத்துக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

சந்தோஷ விந்தியா:

எப்போதாவது ஏதோ ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடி வரும் விந்தியாவை இப்போதெல்லாம்அடிக்கடி நட்சத்திர ஹோட்டல்களில் பார்க்க முடிகிறதாம்.

வீக் எண்ட் பார்ட்டிகளில் பல இளவட்டங்களுடன் ஜாலியாக ஆட்டம் போடுகிறாராம். இந்த பார்ட்டிகளில்அடிக்கடி காணப்படும் இன்னொருவர் வினிதா.

Please Wait while comments are loading...