தீபிகா படுகோனேவுக்கு விரைவில் டும் டும் டும்: காதலர் ரன்வீர் சிங்கை மணக்கிறார்
மும்பை: நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகை தீபிகா படுகோனே ரன்பிர் கபூரை காதலித்து வந்தார். அதன் பிறகு அவர்கள் காதல் முறிந்தது. காதல் முறிவுக்கு பிறகு ரன்பிர் கத்ரீனா கைஃபையும், தீபிகா நடிகர் ரன்வீர் சிங்கையும் காதலித்து வருகிறார்கள்.
தீபிகாவும், ரன்வீரும் தங்கள் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

நண்பர்கள்
தீபிகாவும், ரன்வீரும் காதலிப்பது குறித்து கோச்சடையான் நாயகியிடம் கேட்டதற்கு எல்லா நட்சத்திரங்களும் கூறுவது போல் நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்றார்.

ரன்வீர் சிங்
படங்களில் ஜிம் பாடியை காட்டி ரசிகைகளை மயக்கும் ரன்வீர் சிங் பேட்டி ஒன்றின்போது தீபிகாவை காதலிப்பதாக சூசகமாக தெரிவித்தார்.

வெளிநாடு
தீபிகாவும், ரன்வீரும் வெளிநாட்டுக்கு ஜோடியாக சென்று ஓய்வு எடுத்ததாக செய்திகள் வெளியாகின.

பொது இடங்களில்
பொது இடங்களில் நல்ல நண்பர்களை போன்று நடிக்கும் தீபிகாவும், ரன்வீரும் உண்மையில் தீவிரமாக காதலிக்கிறார்கள் என்று பாலிவுட் இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருமணம்
தீபிகாவும், ரன்வீரும் தங்களின் காதல் திருமணத்தில் முடிய விரும்புகிறார்களாம். அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கும் என்று கூறப்படுகிறது.

ராம் லீலா
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் நடித்தபோது தான் தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











