ரன்வீர் சிங் படத்திற்கு எதிராக பேசினாரா ராதிகா ஆப்தே.. ஆபாச படங்களை தோண்டி எடுத்து விளாசும் ஃபேன்ஸ்!
மும்பை: ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக்ஷய் கன்னா மற்றும் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் இதுவரை 250 கோடி வசூலை உலகளவில் ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டி வருகிறது. சையாரா படத்தை போல 500 கோடி வசூலை இந்த படம் ஈட்டுமா என்பது சந்தேகம் தான் என்றாலும், 300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டும் என்கின்றனர்.
தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான தேரே இஷ்க் மே திரைப்படம் வெறும் 150 கோடி அளவுக்குத்தான் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. துரந்தர் படம் வெளியாவதற்கு முன்பே அனிமல் படத்தை போல இந்த படத்திலும் அதிக வயலென்ஸ் என்றும் பாகிஸ்தானுக்கு எதிரான படம் என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன.

ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட படங்களே படம் வெளியாவதற்கு முன்னர் விமர்சித்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், துரந்தர் படத்தை அட்டாக் செய்யும் விதமாக நடிகை ராதிகா ஆப்தே சொன்ன கருத்துக்கு நெட்டிசன்கள் அவரை போட்டு சோஷியல் மீடியாவில் பொளந்து வருகின்றனர்.
குழந்தைகளை கெடுக்கும் வன்முறை காட்சிகள்: ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகை ராதிகா ஆப்தே, குழந்தை பிறந்ததில் இருந்து தான் சற்றே சினிமாவில் இருந்து விலகி யிருக்கிறேன் என்றார். மேலும், இப்போதெல்லாம் சினிமாவில் அதிகமான வன்முறை காட்சிகளையே படமாக்கி வியாபாரம் பார்க்கின்றனர். இது போன்ற படங்கள் எல்லாம் குழந்தைகளின் மூளை கெடுக்கும் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
ரன்வீர் சிங் மீது பொறாமை: அனிமல் படம் வரும்போதோ, வார் 2 உள்ளிட்ட படங்கள் வரும் போதோ பொங்காத கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே ரன்வீர் சிங்கின் துரந்தர் படம் வரும் போது மட்டும் இப்படி பேசுகிறாரே என ரன்வீர் சிங் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.
உங்களோட ஆபாச படங்களை காட்டுங்க: என்னோட குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் சென்று ஆக்ஷன் எனும் பெயரில் பயங்கரவாத காட்சிகளை மனதில் விதைக்கும் படங்களை காட்ட மாட்டேன் என ராதிகா ஆப்தே கூறியுள்ள நிலையில், ராதிகா ஆப்தே நடித்த ஆபாச படக் காட்சிகளை வெளியிட்டு, இதையெல்லாம் உங்க குழந்தைகளுக்கு காட்டுங்க என நெட்டிசன்கள் ராதிகா ஆப்தேவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
எல்லாமே ஓவர்டோஸ்: வெற்றிமாறன் படங்களில் கெட்ட வார்த்தை வரும் போது ஜாலியாக இதுதான் ரியாலிட்டி என பார்த்த அதே ரசிகர்கள், தற்போது கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை என ஷார்ட்ஃபிலிக்ஸில் வந்த படத்தை பார்த்துவிட்டு பொங்கி வருகின்றனர். ஐட்டம் டான்சர்களை காணாமல் போகச் செய்து ஹீரோயின்களே ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். அதிக ஆபாசம், கெட்ட வார்த்தை, ரஜினி படத்துக்கே ஏ சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு வயலென்ஸ் என எல்லாமே சினிமாவில் ஓவர்டோஸ் ஆகிவிட்டது. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் படங்களை இயக்கவே இயக்குநர்கள் இல்லை என்கிற நிலை தான் அதிகரித்து வருவது காலக்கொடுமை.


Click it and Unblock the Notifications











