கொரோனாவால் உயிரிழந்த ரசிகை...கடைசி நேரத்தில் கூட நடிகைக்கு ட்வீட்.. பிக்பாஸ் பிரபலம் நெகிழ்ச்சி!

By

மும்பை: கொரோனாவால் தனது ரசிகை உயிரிழந்ததை அடுத்து, அந்த பிக்பாஸ் பிரபலம் நெகிழ்ச்சியுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தபாங் 2 உட்பட சில இந்திப் படங்களில் நடித்திருப்பவர் ரஸாமி தேசாய். தில் சே தில் தக் உட்பட ஏராளமான டிவி தொடர்களிலும் நடைத்துள்ளார்.

இவர், இந்தி பிக்பாஸ் 13 வது நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். இப்போது நாகினி 4 தொடரில், நயன்தாரா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

பாதிக்கப்பட்டுள்ளேன்

பாதிக்கப்பட்டுள்ளேன்

இந்நிலையில், இவரது ரசிகை ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழப்பதற்கு முன், ரஸாமியின் ரசிகர்கள் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், இப்போது கோவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறேன்.

அவருக்காகவே

உங்கள் பிரார்த்தனைகள் மூலம் என்னை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் திரும்பி வராவிட்டால், ரஸாமியிடம் சொல்லுங்கள், அவருக்காகவே ட்விட்டரில் இணைந்தேன் என்று. எதிர்மறையான எண்ணங்களை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் அன்பு என்று தெரிவித்துள் ளார். இதை கட் செய்து பதிவிட்டுள்ள நடிகை ரஸாமி, அந்த ரசிகருக்கு நெகிழ்ச்சியாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெகிழ்ச்சி

அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், உங்களின் உண்மையான அன்பும் ஆசிர்வாதமும் நேரிடையாக இதன் (ட்விட்டர்) மூலம் பிரபலங்கள் என்ற முறையில் எங்களுக்கு கிடைக்கின்றன. இதுதான் அந்த ரசிகையின் கடைசி ட்வீட். அந்த கடினமான நேரத்தில் கூட என்னைப் பற்றி நினைத்திருக்கிறார்' என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரார்த்தனை

பிரார்த்தனை

மற்றொரு ட்வீட்டில், வாழ்க்கை விசித்திரமானது. கடினமானது. கைவிட்டப்பட்ட உணர்வில் இருக்கிறேன். அந்த ரசிகையின் குடும்பத்திற்கு இரங்கல். கொரோனா வைரஸ், யாருடைய உயிரையும் பறிக்க வேண்டாம் என்று பிரார்த்தனை செய்வோம். இந்த உலகம் விரைவில் இந்த வைரஸ் தொற்றில் இருந்து விட தினமும் பிரார்த்திப்போம் என்று கூறியுள்ளார்.

பாலியல் சுரண்டல்

பாலியல் சுரண்டல்

ரஸாமி தேசாய், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை கடந்த சில நாட்களுக்கு முன் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். படுக்கைக்கு சென்றால் மட்டுமே சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும், இல்லை என்றால் சும்மா இருக்க வேண்டியதுதான் என்று தன்னை பாலியல் ரீதியாக, தனது முதல் காஸ்டிங் இயக்குனர் சுரண்ட முயன்றார் என்று தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X