தொடங்கியது, பிக்பாஸ் நடிகையுடன் நாகினி 4 கடைசிக்கட்டப் படப்பிடிப்பு..5 வது சீசனில் அதிரடி மாற்றமாமே!
மும்பை: நாகினி 4 தொடரின் கடைசி கட்ட படப்பிடிப்பு 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தியில் சூப்பர் ஹிட்டானத் தொடர், நாகினி. இதன் முதல் சீசனில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முன்னணி கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் தொடர் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

பாம்பு உருவம்
இதன் முதல் பாகம், சன் டிவியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. பாம்பு கதை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்துப் போக தொடர்ந்து இந்த சீரியலைப் மக்கள் பார்த்து வருகின்றனர். மனிதன் பாதி பாம்பு பாதியாக இருக்கும் இச்சாதாரி பாம்புகள், பழிவாங்கத் துடிக்கும் கதையை கொண்ட இந்த தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நான்காம் பாகம்
நாகமணி விலை மதிப்பற்றது என்றும் அதை மனிதர்கள் எடுத்து வைத்துக்கொண்டு, இச்சாதாரி பாம்புகளை அலைய விடுவது என்பது போல இந்த தொடரின் கதை அமைக்கப்பட்டு இருந்தது. இரண்டாம் சீசன், கலர்ஸ் டிவியில் டப் செய்யப்பட்டு வெளியானது. நாகினி 3 ஆம் சீசனும் ஒளிபரப்பான நிலையில், இப்போது நான்காவது சீசன் வெளியாகி வருகிறது. லாக்டவுன் காரணமாக இதன் ஷூட்டிங், தடைபட்டிருந்தது.

ரஸாமி தேசாய்
நான்காவது சீசனில் நியா ஷர்மா, விஜயேந்திர குமேரியா, அனிதா ஹசனந்தனி ஆகியோர் முன்னணி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். மேலும் சிலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்தி பிக்பாஸ் 13 வது தொடர் மூலம் பிரபலமான ரஸாமி தேசாய், இந்த தொடரில் இணைந்துள்ளார். நடிகை ஜாஸ்மின் பாசின் இத் தொடரில் இருந்து விலகியதை அடுத்து அவரது கேரக்டரில், இவர் நடித்து வருகிறார்.

மீண்டும் ஷூட்டிங்
இந்நிலையில், லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இதன் ஷூட்டிங் 3 மாதத்துக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் ரஸாமி தேசாய், நியா சர்மா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இது இந்தத் தொடரின் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு. இதில் ரஸாமி, மஞ்சள் சேலையுடன் கேரவனில் இருந்து இறங்கும் வீடியோவும் நியா சர்மா மேக்கப் போடும் வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதிரடி மாற்றங்கள்
விரைவில் நாகினி 4 தொடர் முடிவடைய இருக்கிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக இதை அவசரமாக முடிப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நாகினி 5 வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகிறது. வேறு நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர் என்று இந்த சீரியலை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











