என்ஜாய் எஞ்சாமி ஃபீவர் இந்த நடிகையும் விட்டு வைக்கவில்லை.. வைரலாகும் வீடியோ!

சென்னை : தமிழ் பாடல்களைப் பொறுத்த வரையிலும் பெரும்பாலான படங்களில் இடம்பெறும் பாடல்களே வைரலாகி வந்ததை இதுவரை பார்த்துள்ளோம்.

இளம் பாடகி தீ மற்றும் அறிவு இணைந்து உருவாக்கியிருக்கும் என்ஜாய் எஞ்சாமி கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ரசிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை பலரும் இந்த பாடலை பார்த்து ரசித்ததோடு பாராட்டுகளையும் தெரிவித்து இருக்க பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவிட்டு வந்த நிலையில் இப்பொழுது நடிகை ராஷிகண்ணா இந்த பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

அதர்வாவுக்கு ஜோடியாக

அதர்வாவுக்கு ஜோடியாக


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ராஷிகண்ணா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் தமிழ் சினிமாவில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

தற்பொழுது தொடர்ந்து தமிழ் படங்களில் முழு கவனத்தை செலுத்தி வரும் ராஷி கண்ணா துக்ளக் தர்பார், அரண்மனை 3,மாதவி என பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் இணைந்து மூன்றாவது முறையாக துக்ளக் தர்பார் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி வீடியோக்களை

சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷிகண்ணா விதவிதமாக ரகரகமாக பல புகைப்படங்களையும் கண்களுக்கு குளிர்ச்சியான கவர்ச்சி வீடியோக்களையும் வெளியிட்டு அனைவரையும் ரசிக்க வைத்து வந்தவர் இப்பொழுது என்ஜாய் எஞ்ஜாமி பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

இடுப்பை வளைத்து நெளித்து

இடுப்பை வளைத்து நெளித்து

பாடகி தீ மற்றும் அறிவு இணைந்து சந்தோஷ் நாராயணின் இசையில் உருவாகியிருந்த என்ஜாய் எஞ்ஜாமி ஆல்பம் பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு அனைவரையும் கவர்ந்ததோடு இணையதளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. நடிகர் சூர்யா முதல் பலர் இந்த பாடலை பாராட்டி இருக்க நடிகர் நடிகைகள் பலரும் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்ட வீடியோக்களும் ட்ரெண்டாகின, இந்த நிலையில் தற்பொழுது என்ஜாய் எஞ்ஜாமி பாடலின் பீவர் நடிகை ராஷி கண்ணாவையும் விட்டுவைக்கவில்லை. செம ஜாலியா தோழியுடன் என்ஜாய் எஞ்ஜாமி பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து செம க்யூட்டாக ஆடியிருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X