குஞ்சம் குஞ்சம் டாமில் கற்கும் விஜய் சேதுபதி பட ஹீரோயின்
Recommended Video

சென்னை: ராஷி கன்னா தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.
இமைக்கா நொடிகள் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ராஷி கன்னா. தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத் தமிழன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் படங்கள் மற்றும் மொழி பற்றி பேசியுள்ளார் அவர். இது குறித்து அவர் கூறியதாவது,

தெலுங்கு
நான்கு ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் நடித்து வருவதால் அந்த மொழி பழக்கமாகிவிட்டது. தற்போது என்னால் தெலுங்கில் பேச முடியும். தெலுங்கை அடுத்து தமிழ் கற்க முயற்சி செய்து வருகிறேன்.

வசனம்
செட்டில் உள்ளவர்களிடம் தமிழில் பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் தமிழை கற்க விரும்புகிறேன். மொழியை தெரிந்து வைத்துக் கொண்டால் தான் வசனங்கள் புரியும். என் தொழிலை மதிப்பவள் நான்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் சங்கத் தமிழன் படத்தில் ஒரு பாடலை படமாக்கியுள்ளோம். அந்த படத்தில் என் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் வசனங்கள் கூட வித்தியாசமனது. அந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

விஷால்
டெம்பர் தெலுங்கு படத்தில் சில மாற்றங்கள் செய்து தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அயோக்யா படம் எடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக அது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிறார் ராஷி கன்னா.


Click it and Unblock the Notifications











