சமந்தாவுடன் போட்டி போடும் ராஷ்மிகா.. ஒரே ஒரு பாடலுக்கு ஆட எவ்வளவு சம்பளம் கேட்டார் தெரியுமா ?

சென்னை : நடிகை ராஷ்மிகாவும் சமந்தாவுடன் போட்டி போட்டுக்கொண்டு தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

தெலுங்கு முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.

கார்த்தியின் 'சுல்தான்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப் படம் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்துள்ளது.

புஷ்பா

புஷ்பா

அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கில் உச்சகட்ட கவர்ச்சியில் சமந்தா ஆடிய நடனம் திரையுலகினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

5 கோடி சம்பளம்

5 கோடி சம்பளம்

இந்தபடத்தில் வரும் 3 நிமிட பாடலுக்காகவே, இப்படத்தை முட்டிமோதி பார்த்தக்கூட்டமும் உண்டு. இந்த ஐட்டம் பாடலுக்கு நடனமாட முதலில் சமந்தா மறுத்ததாகவும், அதன் பின்னர் நடிகர் அல்லு அர்ஜுன் அவரை சமாதானப்படுத்தியதோடு, சம்பளத்தையும் அதிகமாக தருவதாக கூறி ஆட வைத்தாராம். அதன்படி இப்பாடலில் கவர்ச்சி நடனம் ஆட நடிகை சமந்தா ரூ.5 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

சம்பளத்தை உயர்த்தினார்

சம்பளத்தை உயர்த்தினார்

அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகாவுக்கே அவ்வளவு சம்பளம் இல்லை என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால்,ராஷ்மிகா நிச்சயமா கடுப்பில் இருந்து இருப்பார் போல, இதனால், ஒரு பாடலுக்கு ஆட, ராஷ்மிகாவை அணுகிய போது, வந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்திக் கொண்டு ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

இவ்வளவு சம்பளமா

இவ்வளவு சம்பளமா

ஒரே ஒரு பாடலுக்கு ஆட ராஷ்மிகா, சம்பளமாக ரூ.2 கோடி கேட்டுள்ளார். இது தயாரிப்பாளரை அதிர்ச்சி அடைய வைத்தாலும் அவர் கேட்டதை கொடுத்துவிட்டு ஆட வைக்க இருக்கிறார்களாம். அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி இப்போது அனிமல்' என்ற படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அந்த படத்தில் ஆடத்தான் ராஷ்மிகா கோடியில் சம்பளத்தை கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X