திருமணத்தை நிறுத்தியது ஏன்?: விஜய் பட நடிகையின் அம்மா விளக்கம்

பெங்களூர்: நடிகை ரஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்தியதற்கான காரணத்தை அவரின் அம்மா தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகை ரஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி படத்தில் நடித்த போது தன்னை விட 13 வயது பெரியவரான நடிகர் ரக்ஷித் ஷெட்டி மீது காதலில் விழுந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்ததை அவர்கள் கடந்த ஜூலை மாதம் கொண்டாடினார்கள். இந்நிலையில் ரஷ்மிகா திருமணத்தை நிறுத்திவிட்டார்.

திருமணம்

திருமணம்

ரஷ்மிகா திருமணத்தை நிறுத்தியதை அவரின் அம்மா சுமன் உறுதி செய்துள்ளார். ரஷ்மிகா, ரக்ஷித் இடையே ஒத்துப் போகும் என்று தோன்றவில்லை. இந்த திருமணத்தால் இருவரின் கெரியரும் பாதிக்கப்பட்டது. அதனால் அவர்கள் பிரிவதே சரி என்று தோன்றியது. இந்த முடிவை ஒரு மாதத்திற்கு முன்பே எடுத்தாகிவிட்டது என்கிறார் சுமன்.

முக்கியம்

முக்கியம்

ரஷ்மிகா எடுத்துள்ள இந்த முடிவு கடினமானது. ஒவ்வொருவருக்கும் அவரின் வாழ்க்கை முக்கியம். தன்னை காயப்படுத்திக் கொண்டு வாழக் கூடாது. சந்தோஷமாக இருக்க வேண்டும். திருமணம் நின்றதால் நாங்கள் கவலையில் இருந்தாலும் அதில் இருந்து வெளியே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று சுமன் மந்தனா தெரிவித்துள்ளார்.

பேட்டி

பேட்டி

ரக்ஷித்துடன் காதலில் இருந்தபோது ரஷ்மிகா பேட்டி ஒன்றில் கூறியதாவது, நாங்கள் ப்ரொபோஸ் எல்லாம் பண்ணவில்லை. எப்பொழுது காதலில் விழுந்தோம் என்று கூட தெரியாது என்றார். அதற்கு முந்தைய பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, நான் சினிமா துறையை சேராத ஒருவரை திருமணம் செய்ய விரும்புகிறேன். அலுவலகத்தில் இருந்து மாலை வீட்டிற்கு வந்தால் என்னுடன் நேரம் செலவிடும் நபர் வேண்டும். ஆனால் ரக்ஷித் சினிமாக்காரர். அவரால் என்னுடன் அதிக நேரம் செலவிட முடியாது என்றார்.

கீத கோவிந்தம்

கீத கோவிந்தம்

ரஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீத கோவிந்தம் படம் ஹிட்டானதும் தெலுங்கில் அவரின் மார்க்கெட் பிக்கப்பாகிவிட்டது. டோலிவுட்டில் பெரிய ஆளாக ஆசைப்படும் ரஷ்மிகா அதற்குள் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக விரும்பவில்லையாம். அவரின் டோலிவுட் கனவும் திருமணத்தை நிறுத்தியதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Read more about: interview பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X