நடிகருடனான திருமணத்தை நிறுத்திய விஜய் பட நடிகை

By Siva

Recommended Video

பட வாய்ப்புக்காக திருமணத்தை நிறுத்திய விஜய் பட நடிகை

பெங்களூர்: நடிகை ரஷ்மிகா மந்தனா நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கன்னட நடிகையான ரஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீத கோவிந்தம் தெலுங்கு படம் அண்மையில் வெளியாகி ஹிட்டானது. தனது 2வது தெலுங்கு படமே இந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் ரஷ்மிகா.

அதே சமயம் அவர் சொந்த வாழ்க்கையில் ஒரு துயரம் நடந்துள்ளது.

ரக்ஷித்

ரக்ஷித்

ரஷ்மிகா மந்தனாவுக்கும், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களின் திருமணம் நின்றுவிட்டதாக பேச்சு கிளம்பியது. இதை இருவரும் மறுத்தனர். இந்நிலையில் மீண்டும் அதே பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் இம்முறை கிளம்பிய பேச்சில் உண்மை உள்ளது தெரிய வந்துள்ளது.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ரஷ்மிக்கும், ரக்ஷித்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். அதிலும் குறிப்பாக இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சனையாம். இதனால் ரஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்தி விட்டாராம். குடும்பத்தார், நண்பர்களுடன் கலந்து பேசிய பிறகே இந்த கடினமாக முடிவை அவர் எடுத்தார் என்று கூறப்படுகிறது.

படங்கள்

படங்கள்

ரஷ்மிகா கனத்த இதயத்துடன் தான் இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். ஆனால் அவர் தைரியமாக இருப்பது ஆறுதலாக உள்ளது. அவர் தற்போது தனது கெரியரில் கவனம் செலுத்த விரும்புகிறார். அவருக்கு தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. டோலிவுட், சாண்டல்வுட்டில் அவர் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க விரும்புகிறார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

ரஷ்மிகா கீத கோவிந்தம் படத்தை அடுத்து டியர் காம்ரேட் படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடிக்கிறார். ரஷ்மிகா, ரக்ஷித் திருமணம் நின்று போனது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்மிகா ரக்ஷித்தை விட 13 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X