நினைச்சதை சாதிச்சிட்டாரே... சூர்யாவின் 'அருவா'வில் மாளவிகா இல்லை...அந்த லக்கி ஹீரோயின் கன்பர்மாம்!

By

சென்னை: சூர்யாவின் 'அருவா' படத்தில் நடிக்கும் ஹீரோயின் யாரென்பது உறுதியாகி இருக்கிறது.

Recommended Video

Amala paul workout | Anoshka engage finally? | Rashmika Pairs Surya in Aruva

சூரரைப் போற்று படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே சிவா, ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படத்தை இயக்கச் சென்றுவிட்டார். இதனால் சூர்யா, ஹரியுடன் மீண்டும் கைகோர்த்தார்.

அருவா டைட்டில்

அருவா டைட்டில்

இந்த படத்துக்கு அருவா என்று டைட்டில் வைத்துள்ளனர். இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. வழக்கமாக ஹரி படங்களில் அரிவாளுக்கு பஞ்சமிருக்காது. அவரது பெரும்பாலான படங்களில் அரிவாள் இடம்பெறும். இந்த நிலையில் இந்தப் படத்துக்கு அவர் அருவா என்று டைட்டில் வைத்ததை ரசிகர்கள் கிண்டலாக வரவேற்றுள்ளனர்.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

பின்னர் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் படக்குழு பேசி வந்ததாகக் கூறப்பட்டது. ராஷ்மிகா சூர்யா தம்பி கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இந்நிலையில் சூர்யா ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

மகேஷ்பாபு

மகேஷ்பாபு

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், ராஷ்மிகா மந்தனா. சலோ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது சூப்பர் ஹிட்டானது. அங்கு அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட்டாகின. கடைசியாக மகேஷ்பாபுவின் சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் நடித்திருந்தார்.

லக்கி ஹீரோயின்

லக்கி ஹீரோயின்

அடுத்து அல்லு அர்ஜூன் படத்தில் நடிக்க இருக்கிறார். அங்கு அவரை லக்கி ஹீரோயின் என்று கூறிவருகின்றனர். தெலுங்கை போல தமிழிலும் டாப் இடத்தை பிடிப்பேன் என்று கூறியிருந்தாராம் ராஷ்மிகா. அதை போல சூர்யா ஜோடியாக அவர் இப்போது ஒப்பந்தமாகி உள்ளார். கடந்த மாதம் நடிகை ராஷ்மிகாவின் வீட்டில் வருமான வரித்துறை, சமீபத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X