மில்லியன் ஃபேமிலியில் லக்கி ஹீரோயின்..அன்பான அனைவருக்கும் பிக் ஹக்.. வாழ்த்துகளால் நெகிழும் ரஷ்மிகா

By

சென்னை: தமிழ், தெலுங்கு சினிமாவின் லேட்டஸ்ட் ஹாட் ஹீரோனான, ராஷ்மிகா மந்தனா, ட்விட்டரின், மில்லியன் குடும்பத்தில் இணைந்துள்ளார்.

Recommended Video

Rashmika Reply to Memers | Rashmika mandanna Vadivelu Meme | Bheeshma

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் சலோ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

அவருக்கு வரவேற்பு கிடைத்தது. பின்னர், விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது சூப்பர் ஹிட்டானது.

கார்த்தியின் சுல்தான்

கார்த்தியின் சுல்தான்

பிசியாகி விட்ட ராஷ்மி, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் மூலம் தமிழுக்கும் வந்தார். மகேஷ்பாபுவுடன் இவர் நடித்துள்ள சரிலேரு நீக்கெவரு என்ற தெலுங்கு படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ஹிட்டானது. இவர், தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இதை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

அருவா படத்தில்

கர்நாடக மாநிலத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவர் இப்போது தமிழில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அருவா படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாக இருக்கிறது.

ஒரு மில்லியன்

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தெலுங்கில் அல்லு அர்ஜூன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அவருக்கு தெலுங்கு மற்றும் கன்னடத்தில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து ட்விட்டரில் அவர் ஒரு மில்லியன் பாலோயர்களை தொட்டுள்ளார். ஏற்கனவே ஒரு மில்லியன் பாலோயர்களை பல நடிகர், நடிகைகள் தொட்டுள்ள நிலையில், இவரும் கடந்துள்ளார்.

அரவணைப்பு

அரவணைப்பு

இதையடுத்து ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மில்லியன் ஃபேமிலியில் இணைந்ததற்கு நன்றி. அன்பான அனைவருக்கும் பெரிய அரவணைப்பு என்று தெரிவித்துள்ளார். கூடவே வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். இந்நிலையில் ஒரு மில்லியன் ஃபேமிலியில் இணைந்த ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X