திரையரங்கில் நான் முதலில் பார்த்தது தளபதி நடிச்ச படம் தான்… வீடியோ வெளியிட்டு அசத்திய ராஷ்மிகா !
சென்னை : தளபதி விஜய் நடித்த கில்லி திரைப்படம்தான், திரையரங்கில் பார்த்த முதல் படம் என்று நடிகை ராஷ்மிகா மந்தானா கூறியுள்ளார்.
ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா அறிமுகம்
2016ம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல கன்னட திரைப்படங்களில் நடித்தார்.

கீதா கோவிந்தம்
இளம் ரசிகைகளின் கனவு நாயகனான விஜய் தேவர கொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து இவர்கள் இருவரையும் புகழின் உச்சிக்கு கொண்டு போனது. அந்த திரைப்படத்தில் ராஷ்மிகாவின் சிறு சிறு அசைவுகளையும் அவரது ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்து உச்சுகொட்டினர். குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

சுல்தான் படத்தில்
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

நடிக்க வாய்ப்பு
விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜை ஹெக்டே நடித்து வருகிறார். அதேபோல விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தானா நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

20 மில்லியன் ஃபாலோவர்ஸ்
கடந்த மாதம் 19 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டிருந்த ராஷ்மிகா ஒரே மாதத்தில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை தற்போது தொட்டிருக்கிறார்.இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

நான் பார்த்த முதல் படம் கில்லி
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் தளபதியின் விஜய் படமான கில்லி திரைப்படைத்தை தான் முதன் முதலாக திரையரங்குக்கு சென்று பார்த்ததாக அதில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ராஷ்மிகாவின் ரசிகர்களால் மிகவும் வைரலாக்கப்பட்டு வருகிறது.

படு பிஸியாக
பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா மந்தானா மிஷன் மஞ்சு மற்றும் குட் பை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, பாலிவுட்டில் 3வதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், தெலுங்கில் புஷ்பா, ஆடவாலு மீக்கு ஜோகர்லு ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











