அவசரப்பட்ட ராஷ்மிகா... நெட்டில் வெளியான கார்த்தி பட டைட்டில்
Recommended Video
சென்னை: நடிகர் கார்த்தியுடன் தான் சேர்ந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பற்றிய ஃபோட்டோக்களை நடிகை ராஷ்மிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதை அறிந்த படப்பிடிப்பு குழு கோபம் அடைந்தது. இதையறிந்த ராஷ்மிகா இப்பொழுது மன்னிப்பு கேட்டுள்ளார்.
இங்கெம் இங்கெம் இங்கெம் காவாலே என்ற ஒரே பாட்டின் மூலம் இளைஞர்களின் மனதை சூறையாடி தன்னோடு சுருட்டிக்கொண்டு போனவர் தான் ராஷ்மிகா, கீதா கோவிந்தம் என்ற தெலுங்குப் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகிலும் அவர் பிரபலமாகிவிட்டார்.

நடிகை ராஷ்மிகா சிறப்பு செய்தி சொல்றேன் என்ற பேரில் தான் நடிக்கும் படத்தின் சுவாரசிய தகவல்களை இணையதளத்தில் பதிவு செய்து மண்டையை குழப்பி கொண்டார். இப்போ எல்லாம் படமும் ரிலீஸ் ஆகுறத்துக்கு முன்ன கூடியே இன்டர்நெட்ல ரிலீஸ் ஆகுது. அதை தடுக்க பல பேர் பல விதமா போராடிட்டு இருக்காங்க. ஆனா இந்த புள்ள ஆர்வ கோளாறு தாங்காம, படத்தோட டைட்டிலை பட்டுன்னு போட்டு உடைச்சிடிச்சி.
கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கு திரையுலகில் தற்போது அதிகம் நடித்து வருகிறார். தற்பொழுது அவர் தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பெரிய ஹீரோ படம்னாலே ஏதோ ஒரு சஸ்பென்ஸ் வேண்டும் என்று படத்தின் குழு ஆசைப்படுவது வழக்கம் தான்.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிக்கிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்தி கேரக்டர் முதற்கொண்டு படத்தின் அனைத்து விஷயங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
ரகசியம் பரம ரகசியம் என்று சொல்லியே தான் தினமும் ஷூட்டிங் ஸ்பாட் வேலையே ஆரம்பிக்கும். இப்படத்தின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. படத்தின் பெயரை வித்தியாசமான முறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுல்தான் பட ஷூட்டிங்கில் 4ம் நாள் எனக் குறிப்பிட்டு ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.
இந்தப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் நாயகி ராஷ்மிகா மீது படக்குழு கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் ராஷ்மிகா படக்குழுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தற்போது அந்த போட்டோ அவரது பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
என்னதான் போட்டோவை தூக்கிட்டாலும் படத்தோட இன்ஃபர்மேஷன் எல்லோருக்கும் கிடைசாச்சு. ஒரு டைட்டிலை ரெஜிஸ்டர் பண்றது எவ்வளவு கஷ்டம் என்று இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் நன்கு புரிந்த விசயமே. இருந்தாலும் சில பேர் இப்படி சின்ன புள்ள தனமா பண்ணி புடுறாங்க.


Click it and Unblock the Notifications











