16 வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி .. சைட் ரோஸில் வெட்கப்பட்ட ரஷ்மிகா!
சென்னை : நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் முதல்முறையாக அறிமுகமாகும் சுல்தான் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது.
இந்தியில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் ரஷ்மிகாவிற்கு மேலும் பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
சமீபத்தில் நடந்த சுல்தான் பட விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த ரஷ்மிகா மந்தனா 16 வயதினிலே ஸ்ரீதேவி லுக்கில் சைட் ரோஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

தமிழில் அறிமுகமாகிறார்
நடிகை ரஷ்மிகா மந்தனா எது செய்தாலும் அதை ரசிப்பதற்காகவே பல கோடி ரசிகர்கள் இங்கு இருக்க தமிழ் ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பாக இப்பொழுது தமிழில் அறிமுகமாகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் சுல்தான் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்க இதில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.

பாலிவுட்டில் கவனத்தை ஈர்த்து
கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் என விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்து பாராட்டுகளை பெற்று புகழின் உச்சிக்கு சென்ற ரஷ்மிகா மந்தனா இப்பொழுது இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பாலிவுட்டில் இருந்தும் இவரை பல படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். ஆரம்பமே அட்டகாசமாக 2 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் அதில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் மிஷன் மஞ்சு மற்றும் அமிதாப்பச்சனுடன் தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் படம் என இரண்டு படங்கள் இப்போது பாலிவுட்டில் கைவசம் உள்ளது.

16 வயதினிலே ஸ்ரீதேவி
அதைத் தொடர்ந்து தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா மற்றும் ஆடவாலு மீக்கு ஜோ ஜொஹார்லு உள்ளிட்ட படங்களிலும் நடத்து வரும் இவர் சமீபத்தில் சுல்தான் படவிழாவில் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு அங்கு 16 வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி லுக்கில் வந்திருந்த புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகிறது.

வெட்கப்பட்டுக் கொண்டே நிற்கும்
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் முதல்முறையாக அறிமுகமாகும் சுல்தான் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது.
இந்தியில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் ரஷ்மிகாவிற்கு மேலும் பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











