5 இடங்களில் 5 சொகுசு பங்களா?.. சொத்து குறித்து உண்மை சொன்ன ராஷ்மிகா மந்தனா

ஹைதராபாத்: 5 மாநிலங்களில் 5 சொகுசு பங்களாக்கள் ராஷ்மிகா மந்தனாவுக்கு இருப்பதாக தகவல் வெளியான சூழலில் அதுகுறித்து அவர் தற்போது மௌனம் கலைத்திருக்கிறார்.

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் கடந்த 2016ஆம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதனையடுத்து தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் படம் மூலம் பலரது ரசனையையும் கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட ராஷ்மிகா தற்போது பல மொழிகளில் நடித்துவருகிறார்.

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் அதிரிபுதிரி ஹிட்டடிக்க இருவருக்குமான கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட்டானது. இதனையடுத்து இருவரும் டியர் காம்ரேட் படத்திலும் இணைந்து நடித்தனர். இந்தச் சூழலில் தெலுங்கு மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் ராஷ்மிகா. இதனையடுத்து அவருக்கு நேஷனல் க்ரஷ் என்ற பட்டமும் கிடைத்தது. மேலும் அவரை எக்ஸ்ப்ரெஷன் குயின் என்றும் ரசிகர்கள் அழைப்பதுண்டு.

தமிழில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா

தமிழில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா

கன்னடம், தெலுங்கு என ரவுண்டு கட்டி அடித்த ராஷ்மிகா எப்போது தமிழில் அறிமுகமாவார் என ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்தனர். கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார் ராஷ்மிகா. இருப்பினும் அந்தப் படம் ராஷ்மிகா சொல்லிக்கொள்ளும்படியான அறிமுகமாக இல்லை.

விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனாவுக்கு

விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனாவுக்கு

சுல்தான் கொடுத்த சூடு ஆறும்வரை காத்திருந்த ராஷ்மிகா மந்தனா, வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படமும் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் ராஷ்மிகா விஜய்க்கு பக்கா ஜோடியாக இருக்கிறார் என பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே ஹிந்தியிலும் குட் பை, மிஷன் மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

இப்படி பல மொழிகளில் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் மீம் ஒன்று பரவிவருகிறது. அந்த மீமில், 5 வருட சினிமா வாழ்க்கையில் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஹைதராபாத், கோவா, கூர்க், மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் சொகுசு பங்களாக்கள் இருக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஷ்மிகா மந்தனா அளித்த பதில்

ராஷ்மிகா மந்தனா அளித்த பதில்

இந்த மீம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனதை அடுத்து அந்த மீம் பேஜுக்கு சென்று பதிலளித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, "இது உண்மையாக இருக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X