புஷ்பா 2 படத்தோட அப்டேட்... உண்மையை போட்டுடைத்த ராஷ்மிகா மந்தனா
ஐதராபாத் : அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான படம் புஷ்பா.
இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி சிறப்பான வசூல் சாதனையை புரிந்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அப்டேட்டை படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தற்போது வெளியிட்டுள்ளார்.

புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் புஷ்பா. இந்தப் படம் தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் உருவான நிலையில், தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரிலீசானது.

சிறப்பான வரவேற்பு
அனைத்து சென்டர்களிலும் இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக படத்தின் பாடல்களும் அனைத்து மொழிகளிலும் ஒரு பில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளன. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில், தமிழிலும் பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன.

புஷ்பா படத்தின் அடுத்த பாகம்
படத்தின் அடுத்தபாகம் வெளியாக உள்ளதாக முதல் பாகத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே கடந்த மே மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் பாகம் தற்போது வசூல்மழையை பொழிந்துள்ள நிலையில் அடுத்ததாக மிகுந்த உற்சாகத்துடன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க படக்குழுவினர் தற்போது முனைப்பு காட்டி வருகின்றனர்.

மார்ச்சில் சூட்டிங்
இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் மார்ச் மாதத்தில் துவங்கவுள்ளதாக படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். மேலும் இந்த இரண்டாவது பாகம் இந்த ஆண்டில் ரிலீசாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பை பெற்ற டயலாக்குகள்
நடிகர் அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ள டயலாக்குகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. பாலிவுட் பிரபலஙகள், கிரிக்கெட்டர்கள் உள்ளிட்டவர்கள் இந்த டயலாக்குகளை பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவையும் பிரபலமடைந்து வருகின்றன.

அடுத்த படமும் ரிலீஸ்
அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலு படம் தெலுங்கில் கடந்த ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படம் தற்போது இந்தியில் டப் செய்யப்பட்டு வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று ரிலீசாக உள்ளது. இதனால் அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











