தங்க கடல்கன்னியாக மாறிய ராஷ்மிகா மந்தனா!

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக உள்ளவர்.

இப்பொழுது பாலிவுட்டிலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

தமிழில் சுல்தான் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்ற சூழலில் இப்பொழுது தங்க கடல்கன்னி போல ஜொலி ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

நேஷனல் க்ரஷ்

நேஷனல் க்ரஷ்

இந்தியாவின் நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஆட்சி செய்து வருகிறார். அறிமுகமான மிகக்குறுகிய காலத்திலேயே இப்பொழுது உச்ச இடத்தை எட்டியுள்ள ராஷ்மிகா மந்தனா தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

 நேரடியாக தமிழில்

நேரடியாக தமிழில்

இந்த நிலையில் தமிழில் எப்பொழுது நேரடியாக அறிமுகமாவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு சுல்தான் படத்தின் மூலம் அறிமுகம் தந்தார். கார்த்தி நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான சுல்தான் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சுல்தான் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது

 அண்டர் ஆபரேஷனை மையமாக

அண்டர் ஆபரேஷனை மையமாக

தென்னிந்தியாவில் உச்ச நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இப்போது பாலிவுட்டில் மவுசு ஏறிக்கொண்டே போக நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் இந்திய ராணுவத்தில் நடந்த அண்டர் ஆபரேஷனை மையமாகக் கொண்டு உருவாகும் மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்

 அமிதாப்பச்சனுக்கு மகளாக

அமிதாப்பச்சனுக்கு மகளாக

அதைத் தொடர்ந்து அமிதாப்பச்சன் ஹீரோவாக நடிக்கும் குட் பாய் என்ற படத்தில் அமிதாப் பச்சனுக்கு மகளாக நடித்து வருகிறார். ஆரம்பமே அமர்க்களமாக அடுத்தடுத்து இரண்டு படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருவதை பார்த்தால் மிக விரைவிலேயே பாலிவுட்டிலும் முன்னனி நடிகை என்ற இடத்தை எட்டிப் பிடித்து விடுவார் என்றே தோன்றுகிறது.

 தங்க கடல் கன்னி

தங்க கடல் கன்னி

க்யூட்டான நடிப்பை மட்டும் காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ராஷ்மிகா மந்தனா இப்பொழுது அதீத கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தில் எக்கச்சக்க கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவிழ்த்து விட்டார். க்யூட்னஸ், கவர்ச்சி என அனைத்திலும் பட்டையை கிளப்பும் ராஷ்மிகா மந்தனா இப்பொழுது தங்க கடல் கன்னி போல ஜொலி ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் செம வைரலாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X