சரக்கை போட்டு ராஷ்மிகா மந்தனா குத்தாட்டம்.. அந்த இடத்துல வைன் கிளாஸ் வைத்து மலைக்கா அரோரா டான்ஸ்!
மும்பை: தக்க தையா தையா படத்தில் ஷாருக்கான் உடன் ரயில் மீது ஏறி நடனம் ஆடினாரே மலைகா அரோரா, 50 வயதை கடந்த நிலையிலும் எப்படி ராஷ்மிகா மந்தனாவுக்கு போட்டியாக நடனமாடுகிறார் என ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகியுள்ள பேய் படமான 'தம்மா' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு விரைவில் வெளியாக உள்ளது. அந்த படத்தில் இடம்பெற்ற பாய்சன் பேபி பாடலில் மலைகா அரோரா மற்றும் ராஷ்மிகா மந்தனா சரக்கு போட்டு ஆடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்ட நிலையில், அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மலைகா அரோராவின் அசத்தலான நடன அசைவுகளுடன், 'தம்மா' திரைப்படத்தின் புதிய பாடல் 'பாய்சன் பேபி' வெளியான நிலையில், ராஷ்மிகா மந்தனா டிரெண்டாகி வருகிறார்.
ராட்சசியாக ராஷ்மிகா மந்தனா: ரத்தத்தை குடிக்கும் ராட்சசியாக தம்மா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முஞ்சியா, ஸ்ட்ரீ 2, பேடியா உள்ளிட்ட பேய் படங்களின் யூனிவர்ஸில் தம்மா படமும் இணைந்துள்ளது. பாய்சன் பேபி பாடலில், படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவும் மலைகா அரோராவும் இணைந்து நடனமாடியுள்ளார். ஜாஸ்மின் சான்ட்லஸ், சச்சின்-ஜிகர் மற்றும் திவ்யா குமார் ஆகியோர் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
நெஞ்சில் சரக்கு வைத்து ஆட்டம்: பாய்சன் பேபி பாடல் காட்சியின் தொடக்கத்தில், மலைகா அரோரா ஒரு கிளப் போன்ற செட்டப்பில் மேடைக்கு நடந்து வருகிறார். அப்போது ஆயுஷ்மான் குரானாவின் கதாபாத்திரம் ரஷ்மிகாவுடன் அந்த இடத்திற்குள் நுழைகிறது. மலைகா அரோரா ஒயின் கிளாஸை தனது நெஞ்சில் வைத்துக் கொண்டு கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து படைத்துள்ளார்.

ராஷ்மிகாவும் குடித்துவிட்டு: ரஷ்மிகாவை ஆயுஷ்மான் தன்னுடன் வைத்திருக்க முயற்சிக்கிறார். ஆனால், ரத்தக் கறையாக ஒரு கிளாஸ் ரெட் ஒயினை ரஷ்மிகா தவறாகப் பார்க்கும்போது, கட்டுப்பாடுகள் தளர்கின்றன. படக்குழு வெளியிட்ட டிரெய்லரின் படி, ரஷ்மிகா ஒரு காட்டேரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. அடுத்த கணமே, ரஷ்மிகா அந்த ஒயினை ஒரே மூச்சில் குடித்துவிடுகிறார். அதன் பிறகு ரஷ்மிகா போடும் கவர்ச்சி குத்தாட்டம் தான் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தியேட்டரில் திருவிழாவாக மாறப்போகிறது. கடைசியாக மலைகா அரோராவுடன் இணைந்து போட்டிப் போட்டு டான்ஸ் ஆடி மலைக்க வைக்கிறார்.
தீபாவளிக்கு தம்மா: 'தம்மா' திரைப்படத்தை ஆதித்யா சர்போதார் இயக்கியுள்ளார். ஆயுஷ்மான் குரானா, ராஷ்மிகா மந்தனா, பரேஷ் ராவல் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் இரண்டு நிமிடம் இருபத்தி நான்கு வினாடிகள் கொண்ட டிரெய்லர், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆயுஷ்மான் குரானா இடையேயான காட்டேரி காதல் கதையின் ஒரு பார்வையை வழங்குகிறது.
டிரெய்லரின் தொடக்கத்தில், நவாசுதீன் சித்திக் 'தம்மா'வாக அறிமுகமாகிறார். மனிதகுலத்தை ஆளும் ஒரு காட்டேரி படையை உருவாக்க மனிதர்களை காட்டேரிகளாக மாற்றுவதற்கான தனது திட்டத்தை அறிவிக்கிறார்.
ஆனால் எதிர்பாராத திருப்பமாக, நவாசுதீன் பிடிபட்டு 1000 ஆண்டுகளாக ஒரு குகையில் அடைக்கப்படுகிறார். டிரெய்லரின்படி, ஆயுஷ்மான் எதிர்பாராத விதமாக நவாசுதீனை சந்தித்த பிறகு, அவரும் ஒரு காட்டேரியாக மாறுகிறார்.
இதனைத் தொடர்ந்து, ராஷ்மிகா தோன்றி, ஆயுஷ்மானைத் தன் முதுகில் தூக்கிச் செல்வது காட்டப்பட்டுள்ளது. தினேஷ் விஜன் மற்றும் அமர் கௌசிக் ஆகியோர் மேடாக் ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் 'தம்மா' படத்தை தயாரித்துள்ளனர்.
நிரேன் பட், சுரேஷ் மேத்யூ மற்றும் அருண் ஃபுலாரா ஆகியோர் திரைக்கதையை எழுதியுள்ளனர். 'தம்மா' திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











