Rashmika: ஹனிமூன் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா.. இங்கேயும் விளம்பரப்படுத்தி பலே வியாபாரம்!

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் பல வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் திருமணம் செய்துக்கொண்டனர். உதய்பூரில் 4 நாட்கள் ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டின.

அதன் பின்னர், ஹைதராபாத்தில் ஒட்டுமொத்த இந்திய பிரபலங்களுக்கும் மிகப்பெரிய திருமண வரவேற்பு நிகழ்ச்சியை இம்மாத தொடக்கத்தில் நடத்தினர்.

Rashmika Mandanna and Vijay Deverakonda Honeymoon video out now
Photo Credit:

திருமணம் முடிந்த கையோடு மான்யவார் விளம்பரத்தில் நடித்து சில கோடிகளை தேற்றிய இருவரும் தற்போது தங்கள் ஹனிமூன் விளம்பர வீடியோவையும் வெளியிட்டு காசு பார்த்துள்ளனர்.

ஓடிடிக்கு நோ: ஹன்சிகா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் தங்கள் திருமண வீடியோக்களை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்று லாபம் ஈட்டினர். பாவம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஹன்சிகாவின் திருமண வீடியோ தான் உள்ளது. ஆனால், இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். நயன்தாராவின் திருமண வீடியோ பெரும் போராட்டத்துக்குப் பிறகு நெட்பிளிக்ஸில் வெளியானது. ஆனால், அதன் பின்னரும் தனுஷ் மூலம் வழக்கு, சர்ச்சை என பஞ்சாயத்தானது. இந்நிலையில், 60 கோடிக்கு வந்த திருமண வீடியோ டீலை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஹனிமூன் வீடியோ: தாய்லாந்தில் உள்ள Koh Samui எனும் தீவில் தங்களது ஹனிமூனை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா தம்பதியினர் கொண்டாடினர். தற்போது அதன் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆனால், வெறும் ஹனிமூன் வீடியோவாக வெளியிடாமல் விளம்பரமாகவே வெளியிட்டுள்ளனர். Airbnb எனும் சுற்றுலா நிறுவனத்தின் விளம்பரமாக அந்த வீடியோ வெளியாகி உள்ளது. சொந்த வீட்டில் இருக்கும் உணர்வை அந்த நிறுவனம் வழங்கியதாக ராஷ்மிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டு தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

அமோக வருமானம்: ஏற்கனவே திருமணம் முடிந்த உடனே இருவரும் ஜோடியாக நடித்த மான்யவார் திருமண ஆடை விளம்பரம் வெளியானது. அந்த விளம்பரத்துக்கே இருவரும் சுமார் 10 கோடி ரூபாய் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது இந்த ஹனிமூன் விளம்பர வீடியோவுக்கும் பல கோடி ரூபாய் வாங்கியிருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தின் செலவுகளை சரி செய்ய பல விதங்களில் இருவரும் வருமானத்தை ஈட்டி வருவதாக கூறுகின்றனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து ரணபலி எனும் படத்திலும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X