ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் ஷூட்டிங் போறாங்களா?.. திருமண சமயத்தில் அவங்க செய்வதை பாருங்க

ஹைதராபாத்: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் 26ஆம் தேதி உதய்பூரில் இருக்கும் அரண்மனையில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களுடைய திருமண ரிசப்ஷன் மார்ச் நான்காம் தேதி நடக்கிறது. இன்னும் சில நாட்களே இருப்பதால் திருமண வேலைகள் எல்லாம் மும்முரமாக தொடங்கியிருக்கும் சூழலில்; அவர்கள் இரண்டு பேரும் ஷூட்டிங் செல்லவிருப்பதாக ஒரு தகவல் வந்திருக்கிறது.

இந்திய திரையுலகின் இப்போதைய அதீத எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் விஷயங்களில் ஒன்று ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம். இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக காதலித்து; கடந்த வருடத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்கள். அதனையடுத்து 26ஆம் தேதி உதய்பூரில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். முதலில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் அழைக்க முடிவெடுத்ததாகவும்; இப்போதோ பிரபலங்களையும் அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபலங்கள் லிஸ்ட் இதுவா?: அவர்களது திருமணத்தில் முகேஷ் அம்பானி, கரண் ஜோஹர், சல்மான் கான், அல்லு அர்ஜுன், சந்தீப் ரெட்டி வங்கா, கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கிறார்களாம். மேலும் மார்ச் நான்காம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் ரிசப்ஷனில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்திலிருந்தும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதற்கு தயாராக இருக்கிறார்கள் எனவும் டோலிவுட் வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.

Rashmika Mandanna and Vijay Deverakonda to Shoot Ad Together Just Days Before Udaipur Wedding
Photo Credit:

திருமண ஏற்பாடுகள்: இதுவரை ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் தங்களது திருமணம் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார்கள். அதேசமயம் தங்கள் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக கவனித்துவருகிறார்கள். இவ்விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக வெளிநாட்டிலிருந்து கிட்டத்தட்ட 100 பவுன்சர்களை அவர்கள் களமிறக்கியிருக்கிறார்களாம். மேலும் திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மொபைல் ஃபோனை பயன்படுத்த வேண்டாம் எனவும் ரூல் போட்டிருக்கிறார்களாம். இரண்டு பேரின் வீடுகளும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

கொண்டாட்டம் எப்போது ஆரம்பம்: அவர்களது திருமண கொண்டாட்டம் 24ஆம் தேதி ஹல்தியிலிருந்து ஆரம்பிக்கிறது. அதற்கு பிறகு 25ஆம் தேதி மெஹந்தி, 26ஆம் தேதி திருமணம் என பிளான் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையே திருமண வேலைகள் அதிகம் இருப்பதால் ஷாகித் கபூருடன் நடிக்கவிருந்த ஒரு பாலிவுட் படத்திலிருந்து ராஷ்மிகா மந்தனா வெளியேறிவிட்டார் என்றும் சில நாட்களாகவே ஒரு பேச்சு ஓடுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

என்ன தகவல்?: அதாவது இன்னும் சில நாட்கள் மட்டும் திருமணத்துக்கு இருக்கும் நிலையில் அவர்கள் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம். இந்த விளம்பர படம் திருமணத்துக்காக எடுக்கப்படுகிறதா அல்லது வேறு விஷயத்துக்காக எடுக்கப்படுகிறதா என்பது குறித்து தெரியவில்லை என தெரியவில்லை. மேலும் இதில் கணவன், மனைவியாக நடிக்கிறார்களாம். ஏற்கனவே அவர்கள் ஒரு சோப் விளம்பரத்தில் கணவன், மனைவியாக நடித்திருந்தார்கள். திருமண சமயத்தில் அவர்கள் விளம்பர ஷூட்டிங் செல்வதாக வெளியாகியிருக்கும் தகவல் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X