Rashmika Wedding Expenses: ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா?

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தன்னா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் தான் ஒட்டுமொத்த இந்தியாவிலும் டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. 3 கிலோ தங்க நகைகள் திருமணத்துக்காக பயன்படுத்தப்பட்டதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், திருமணம் நடைபெற்ற ஹோட்டலின் ஒரு நாள் வாடகை குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

சங்கீத், மெஹந்தி, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை பிரம்மாண்டமாக உதய்பூரில் உள்ள ITC Mementos Ekaaya என்ற சொகுசு ரிசார்ட்டில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ட்ரீம் வெட்டிங்காக நடத்தினர்.

Rashmika Mandanna and VIjay Deverakonda Wedding Expenses details trending
Photo Credit:

தற்போது அதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், நாளை ஹைதராபாத்திலும் நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தமாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணத்துக்காக பல கோடிகள் செலவு ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொகுசு ஹோட்டலின் செலவுகள்: உதய்பூரில் உள்ள ITC Mementos Ekaaya என்ற சொகுசு ரிசார்ட்டில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடைபெற்றது. 24ம் தேதி அங்கே நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியின் போட்டோக்களை பார்த்தாலே அதற்கான அலங்கார செலவுகள், உடைகள், அவர்கள் அணிந்துள்ள நகைகள் என அனைத்துமே காஸ்ட்லியாக உள்ளது தெளிவாக தெரிகிறது. அங்குள்ள அறை விலை ஒரு இரவுக்கு சுமார் 20,000 முதல் 1 லட்சம் வரை இருக்கும் என்கின்றனர்.

பல நாட்கள் கொண்டாடப்பட்ட திருமண நிகழ்ச்சிகள் (மெஹந்தி, சங்கீத், ஹல்தி உள்ளிட்டவை), அலங்காரம், உணவு, விருந்தினர்களின் தங்கும் வசதி ஆகியவற்றை சேர்த்து பார்த்தால் 90 லட்சம் முதல் 2.5 கோடி அல்லது அதற்கும் அதிகமாக செலவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சில அறிக்கைகள் தினசரி முழு ஏற்பாடுகளுடன் சேர்த்து 1 கோடி முதல் 2.5 கோடி வரை செலவாகலாம் என்றும் குறிப்பிடுகின்றன. ஹல்தி, மெஹந்தி, சங்கீத் மற்றும் திருமண செலவு மட்டும் சுமார் 4 நாட்களில் 10 கோடிக்கும் மேல் ஆகியிருக்கும் என கணிக்கப்படுகிறது. இதில், அவர்களின் நகைகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் சேராது என்கின்றனர்.

நகைகள் & மணமகள் அலங்காரம்: ராஷ்மிகா அணிந்திருந்த கோல்டு டெம்பிள் ஸ்டைல் நகைகள் சுமார் 3 கிலோ எடையுள்ளதாக இருக்கும் என பாலிவுட் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நகைகளின் மதிப்பு சுமார் 4 கோடி முதல் 7 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சங்கீத் நிகழ்ச்சியில் ராஷ்மிகா அணிந்துள்ள விலையுயர்ந்த கற்கள் பதித்த நகைகள் மற்றும் அவரது உடை, விஜய் தேவரகொண்டாவின் ராஜ உடை எல்லாம் சுமார் 2 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் பிரபலங்களுக்காக நடைபெறவுள்ள திருமண வரவேற்பு விழா மட்டுமே தனியாக 7 முதல் 10 கோடி செலவில் நடைபெறும் என்றும் ஒட்டுமொத்தமாக சுமார் 30 முதல் 40 கோடி ரூபாயை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் தங்களது திருமணத்துக்காக செலவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

லாபமும் பார்த்துட்டாங்க: இந்தியா முழுவதும் உள்ள கோயில்களில் அன்னதானம், திருமணத்துக்குப்பிறகு வழங்கப்பட்ட இனிப்புகள் என அனைத்துமே இதில் அடங்கும் என்கின்றனர். ஆனால், இதில், வேடிக்கை என்னவென்றால் திருமண செலவுகளை சரிகட்டும் விதமாக மான்யவார் விளம்பரத்தில் இந்த நட்சத்திர ஜோடி நடித்து பல கோடிகளை சம்பாதித்தும் உள்ளனர் என்றும் பல பிரபலங்களிடம் இருந்து விலை உயர்ந்த பரிசுகளும் குவியப்போகிறது என்கின்றனர். ஆனால், உண்மையான திருமண செலவு குறித்த தகவல்களை இருவருமே அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X