விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம்.. அதற்கு பிளான் செய்திருக்கும் ஜோடி?.. யார் ஐடியா இது?

சென்னை: நேஷனக் க்ரஷ் என்று கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்துவருகிறார். அவர்களுக்கு இந்த மாதத்தில் உதய்பூரில் வைத்து திருமணம் நடக்கவிருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வருகின்றன. அதனை இரண்டு பேரும் ஒத்துக்கொள்ளவில்லை. அதேசமயம் மறுக்கவும் இல்லை. இந்நிலையில் அவர்கள் திருமணம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக மாறியிருக்கிறார். தெலுங்கில் அவர் நடித்த புஷ்பா, புஷ்பா 2 உள்ளிட்ட படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதில் அவரது நடிப்பும், கிளாமரும் அட்டகாசமாக இருந்ததாக ரசிகர்கள் புகழ்ந்தார்கள். தெலுங்கு திரையுலகம் கொடுத்த சூப்பர் வரவேற்பு தமிழிலும் கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தார். ஆனால் தமிழில் அவர் நடித்த சுல்தான், வாரிசு ஆகிய படங்கள் காலை வாரிவிட்டன. இதனால் அவரது கவனத்தை தமிழிலிருந்து கொஞ்சம் திருப்பியிருக்கிறார்.

பாலிவுட்டில் ஹிட்: தமிழில் அவர் சொதப்பினாலும் ஹிந்தியிலும் அதகளப்படுத்திவருகிறார். அனிமல், சிக்கந்தர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவற்றில் அனிமல் படம் பெரிய சர்ச்சையை சம்பாதித்தது. அதேசமயம் ராஷ்மிகாவுக்கு தேவையான பெயர் கிடைத்துவிட்டது. சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்த சிக்கந்தர் தோல்வியை சந்தித்தது. தன்னிடம் சொன்னது வேறு எடுத்தது வேறு என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Rashmika Mandanna and Vijay Deverakonda Wedding in Udaipur OTT Streaming Plans Create Buzz
Photo Credit:

பெர்சனல் வாழ்க்கை: ராஷ்மிகாவின் பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை கன்னட திரையுலகத்தில் அறிமுகமானபோது நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்தார். அவர்கள் இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அது திருமணம் வரை செல்லவில்லை. அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்; சம்பந்தப்பட்டவர்கள் அதை கடந்து சென்றுவிட்டார்கள்.

விஜய் தேவரகொண்டாவுடன் காதல்: ரக்‌ஷித் ஷெட்டியை பிரிந்த ராஷ்மிகா அடுத்ததாக நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்துவருகிறார். இரண்டு பேரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் ஒரு தகவல் ஓடியது. சூழல் இப்படி இருக்க கடந்த வருடத்தில் அவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் தங்களுக்கு நெருக்கமானவர்களை மட்டுமே இரண்டு பேருமே அழைத்திருந்தார்கள். நிச்சயதார்த்தத்துக்கு பிறகு அவர்களது திருமணம் பற்றிய பேச்சுத்தான் எங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது.

எப்போது திருமணம்?: அவர்களது திருமணம் உதய்பூரில் பிரமாண்டமாக பிப்ரவரி 26ஆம் தேதி நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு ரசிகர் விமான நிலையத்தில், '26ஆம் தேதி நடக்கும் உங்கள் திருமணத்துக்கு காத்திருக்கிறோம்' என சொல்ல; ராஷ்மிகா மந்தனா சிரித்தபடி தலையாட்டிவிட்டு சென்றார். எனவே 26ஆம் தேதி திருமணம் உறுதி என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர்களது திருமணம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

என்ன தகவல்?: அதாவது விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் தங்களது திருமண நிகழ்வுகளை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸோ அல்லது பிரபலமான ஓடிடி தளமோ இதனை ஸ்ட்ரீம் செய்யும் என கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களது திருமண நாள் தொடர்பான நிகழ்வுகளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு பெரிய தொகைக்கு விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவும் அதே ஐடியாவை ஃபாலோ செய்கிறார்கள் என வெளியாகியிருக்கும் தகவல் ஆர்வத்தை கிளப்பியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X