Rashmika: 7 நாட்கள்.. ரூ 25 கோடி செலவு! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட ஹனிமூன் பிளான்

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா வரும் 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்யவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல், மார்ச் மாதம் 4ஆம் தேதி அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இப்படி இருக்கையில் இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

இப்படி இருக்கையில் இவர்களின் ஹனிமூன் ட்ரிப் எங்கே என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை. நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நீண்ட நாட்கள் காதலித்துக் கொண்டு இருந்த நிலையில், தற்போது தம்பதியர்களாக மாறி திருமண வாழ்க்கையைத் தொடங்க தயாராகிவிட்டனர். ஒரு புறம் வாழ்த்துகள், ப்ரீ வெட்டிங் பார்ட்டி, திருமண ஏற்பாடு என செம பிஸியாக இருக்கிறார்கள்.

Rashmika Mandanna and Vijay Deverakonda Wedding Couple Plans to Spend 25 Crore Honeymoon at Calivigny Island
Photo Credit:

இந்நிலையில் இவர்களின் ஹனிமூன் ட்ரிப் குறித்த கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் ஹனிமூன் பிளானானது உலகிலேயே மிகவும் எக்ஸ்பென்சிவ் ஹனிமூன் ட்ரிப்பாக இருக்க வேண்டும் என்று பிளான் செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது, இருவரும் ஐஸ்லாந்து, இத்தாலி மற்றும் ஜப்பான் என பல நாடுகளுக்கு செல்லலாம் என்று எக்னாமிஸ் டைமில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் உலகின் மிகவும் எக்ஸ்பென்சிவான ஹனிமூன் ட்ரிப்புக்குத்தான் தயாராகி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

ஹனிமூன் தீவு: அதாவது இவர்கள் இருவரும், கரிபியன் கடலில் அமைந்துள்ள காலிவிக்னி தீவுக்கு ஹனிமூன் செய்ய பிளான் செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவானது, கிரெடனா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அதன் உரிமையாளர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜஸ் கொகைன் என்பவருக்குச் சொந்தமானது. இந்த தீவு தான் உலகிலேயே அதிக பொருளாதார செலவில் வாடகைக்கு விடப்படும் ஹனிமூன் தீவு ஆகும். இந்த தீவில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 80 பேர் வரை தங்க முடியும் என்றும், தேவைப்பட்டால் ஹனிமூனுக்கும் வாடகைக்கு விடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Rashmika Mandanna and Vijay Deverakonda Wedding Couple Plans to Spend 25 Crore Honeymoon at Calivigny Island

25 கோடிகளா?: இங்கு ஒரு நாளைக்கு தங்க இந்திய ரூபாயில் சுமார் ஒரு கோடியே 40 லட்சம் வரை செலவு ஆகும் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவர் மட்டும் தங்க ஒரு வாரத்திற்கு குறைந்த பட்சம் கிட்டத்தட்ட ரூபாய் 25 கோடிகள் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், இந்த தீவில் இருக்கும் அரண்மனையில் உலகத்தரம் வாய்ந்த சமையல் கலைஞர்கள், மசாஜ். ஸ்பா, ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர்கள் என பலரும் உள்ளார்களாம். 24 மணி நேரமும் இந்த தீவில் சர்வீஸ் இருந்து கொண்டே இருக்குமாம். இந்த தீவுக்கு தான் ஹனிமூன் செல்ல இவர்கள் இருவரும் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படியாக ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X