உதய்பூரில் இந்த ஸ்டார் ஹோட்டலில் தான் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் நடக்கப் போகுதா?.. 2 ரிசப்ஷன்!

மும்பை: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் வரும் பிப்ரவரி 26ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின. அவர்களின் திருமண அழைப்பு என்ற ஒன்றும் வைரலானது. உதய்பூரில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போகின்றனர் என்றும் 2 வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர் என்கிற லேட்டஸ்ட் தகவல்கள் கசிந்துள்ளன.

தனக்கு திருமணம் என்றால் முதலில் மீடியாக்களிடம் தான் சொல்வேன் என விஜய் தேவரகொண்டா சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியின் போது கூறியிருந்தார். ஆனால், தனது திருமணத்தை கடைசி வரை ரகசியமாகவே வைத்து நடத்த முடிவெடுத்து விட்டார் என்கின்றனர்.

Rashmika Mandanna and Vijay Deverakonda Wedding Venue and 2 Wedding Reception buzz trending
Photo Credit:

திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என யாரையும் அழைக்க வேண்டாம் என்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

டோலிவுட் மருமகள்: சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு திருமணமாகி நடிகை சமந்தா டோலிவுட் மருமகளாக சென்றார். இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா திருமணமாகி டோலிவுட் மருமகளாக போகிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் தற்போது படு பிசியான நடிகையாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் ரொம்பவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த நட்சத்திர ஹோட்டலில் தான் திருமணம்?: உதய்பூரில் தான் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் நடைபெற போகிறது எனக் கூறுகின்றனர். இந்நிலையில், உதய்பூரில் உள்ள தி மெமெண்டோஸ் ஐடிசி ஹோட்டல் (The Mementos by ITC Hotels), ரஃபேல்ஸ் உதய்பூர் (Raffles), அல்லது ஃபேர்மண்ட் (Fairmont) உள்ளிட்ட 3 நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றில் தான் இருவரது திருமணமும் வரும் பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் என தகவல்கள் கசிந்துள்ளன. கடைசி வரை அனைத்து ஏற்பாடுகளையும் ரொம்பவே ரகசியமாக ராஷ்மிகா நடத்தி வருகிறார் என்கின்றனர்.

2 ரிசப்ஷன்: திருமணம் முடிந்த கையோடு மும்பையில் ஒரு ரிசப்ஷனை நடத்த ராஷ்மிகா மந்தனா முடிவு செய்துள்ளாராம். மேலும், மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பங்கேற்கும் ரிசப்ஷன் தொடர்பான ஏற்பாடுகளை விஜய் தேவரகொண்டா கவனித்து வருகிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X