மத்த நடிகைகள் ராஷ்மிகாவை பார்த்து கத்துக்கணும்.. கால் முடியாத நிலையிலும் என்ன பண்றாரு பாருங்க!
சென்னை: இந்தியளவில் தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனா தனது படத்தின் பூஜைக்கு சென்ற காட்சிகள் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில், தனக்கு காலில் அடிபட்டு நடக்கவே முடியவில்லை என்றும் சில நாட்கள் ஷூட்டிங் வர வாய்ப்பில்லை என்றும் ராஷ்மிகா மந்தனா போட்ட போஸ்ட் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் உடன் அப்படி ஆட்டம் போட்டாரே ராஷ்மிகா மந்தனா ஒட்டுமொத்த கண் திருஷ்டியும் அவர் மீது பட்டுவிட்டதோ இப்படி காலிலேயே அடிபட்டு விட்டதே என ரசிகர்கள் புலம்பித் தவித்தனர்.

இந்நிலையில், அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக அடுத்து உருவாகவுள்ள இந்தி படமான 'சாவ்வா’ (Chhaavva) படத்தின் பட பூஜைக்கு கால் முடியாத நிலையிலும் வீல் சேரில் சென்று பட பூஜையில் அவர் செய்த வேலையை பார்த்து தான் பலரும் பாராட்டி வருகின்றனர்.
புரமோஷனுக்கு நோ சொல்லும் நடிகைகள்: நயன்தாரா முதல் அபர்ணதி வரை சினிமாவில் நடிப்பது மட்டும்தான் தங்கள் வேலை என்றும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்க முடியாது என ஒரு சில நடிகைகள் புரமோஷனுக்கு நோ சொல்லி வருவதை ஃபேஷனாக கொண்டுள்ளனர். நடிகர் அஜித் குமார் ஆரம்பித்து வைத்த இந்த ரூட்டை பல நடிகைகளும் இன்று ஃபாலோ செய்து வரும் நிலையில், ராஷ்மிகா மந்தனா செய்த செயல் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
கால் முடியாத நிலையிலும்: பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், ஆலியா பட்டுக்கு இணையாக தற்போது முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் அவர் படங்களில் நடிக்க மாட்டேங்கிறார் என்கிற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டு வந்த நிலையில், கால் முடியாத நிலையிலும் பாலிவுட் படத்தின் பட பூஜையில் அவர் பங்கேற்ற விதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்: பாலிவுட்டில் அனிமல் திரைப்படம் 900 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா நடித்த புஷ்பா 2 திரைப்படம் 2000 கோடி வசூலை தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்து சல்மான் கானின் சிக்கந்தர், தனுஷின் குபேரா படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா லக்ஷ்மன் உத்தேக்கர் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள சாவ்வா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் கணவர் விக்கி கவுஷல் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்சத்தில் சம்பளம்: புஷ்பா 2 வெற்றிக்குப் பிறகு ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் ஜெட் வேகத்தில் ஏறிவிட்டதாகவும் ஒரு படத்துக்கு 15 கோடி முதல் 20 கோடி வரை அவரது சம்பளம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், சம்பளம் விவரம் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா மந்தனா காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கள் கிளம்பி வரும் நிலையில், இருவரும் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











