அவார்டுகளை அள்ளி குவித்த அனிமல்.. ராஷ்மிகாவை காணவில்லையே.. அந்த நடிகைக்கு பின்னால் ஒளிந்து போறாரே!
சென்னை: பிலிம்ஃபேர் விருது விழா நிகழ்ச்சியில் அனிமல் திரைப்படம் 6 விருதுகளை அள்ளிய நிலையில், அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா மந்தனாவை நிகழ்ச்சியில் காணவில்லையே ஏன் என்னாச்சு? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.
அனிமல் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில், அதன் அறிவிப்பையே ராஷ்மிகா மந்தனா தாமதமாகத்தான் அறிவித்தார். அந்த படம் வெளியான பின்னர் ராஷ்மிகாவை ரசிகர்கள் பெரிதும் கண்டுக் கொள்ளவில்லை.

அவருக்கு பதிலாக படத்தின் இரண்டாம் பாதியில் வரும் பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி தான் ரசிகர்களின் திடீர் கிரஷ்ஷாக மாறிவிட்டார். அனிமல் 2ம் பாகமான அனிமல் பார்க் படத்திலும் திரிப்தி திம்ரிக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 விருதுகளால் அனிமல் டீம் உற்சாகம்: அனிமல் படத்தை பல சினிமா பிரபலங்களே கழுவி ஊற்றி வரும் நிலையில், இந்த படம் தான் ரொம்ப சிறப்பான படம் என பிலிம்ஃபேர் விருது விழாவில் 6 விருதுகளை அள்ளிக் கொடுத்துள்ளனர். ஷாருக்கான் விழாவுக்கு வரமாட்டேன் என சொல்லிவிட்டாரா என தெரியவில்லை அனிமல் படத்திற்கு ஒரேயடியாக விருதுகளை கொடுத்து சந்தீப் ரெட்டி வங்காவை சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டனர்.

அனிமல் பார்க் இதை விட பயங்கரமா இருக்கும்: அனிமல் திரைப்படத்திற்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், அனிமல் பார்க் திரைப்படம் இதை விட பயங்கரமாக இருக்கும் என நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்தீப் ரெட்டி வங்கா தைரியமாக பேட்டி அளித்துள்ளார். அந்த படத்துக்கு எப்படியெல்லாம் விமர்சன சர்ச்சைகள் வரப் போகிறது என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.
ராஷ்மிகாவை காணவில்லை: அனிமல் படம் பிலிம்ஃபேர் விருது விழாவில் 6 விருதுகளை அள்ளிய நிலையில், படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவை நிகழ்ச்சியில் ஆளையே காணவில்லையே என்கிற கேள்வி எழுந்துள்ளது. சிறந்த நடிகைக்கான விருது ஆலியா பட்டுக்குத் தான் செல்கிறது என அறிந்ததுமே அவர் நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கல்யாணி பின்னாடி ஒளிந்து: அதே சமயம் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உடன் விமான நிலையத்துக்கு ராஷ்மிகா கிளம்பி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில், புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுக்க முயன்ற போது இவங்க தான் கல்யாணி, இவங்களும் நடிகை தான் என அவரை முன்னாடி நிறுத்தி விட்டு அவருக்கு பின்னாடி ஒளிந்து கொண்டே விமான நிலையத்துக்கு சென்ற வீடியோ காட்சிகள் தீயாய் பரவி வருகின்றன.
அடுத்து புஷ்பா 2: இந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்து புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படத்திலும் ராஷ்மிகா மந்தனா தான் ஹீரோயின் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அனிமல் படத்துக்கு பிறகு இந்தியில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த ராஷ்மிகாவுக்கு அங்கே அவரை பெரிதாக யாரும் கண்டுக் கொள்ளாத நிலையில், மீண்டும் தென்னிந்தியா பக்கம் திரும்பியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











