Rashmika Mandanna: ரூ 3000 கோடிகள்! பாக்ஸ் ஆபிஸில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களையே ஓரம் கட்டிய ராஷ்மிகா

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு சினிமாவில் இருந்து இப்போது தமிழ் சினிமா, இந்தி சினிமா என இவர் கலக்கி வருகின்றார். நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா, இந்திய சினிமாவில் பாலிவுட் பிரபலங்களே செய்யாத சாதனையைச் செய்துள்ளார். இவர் கடைசியாக நடித்து வெளியான மூன்று படங்களின் மொத்த வசூல் ரூபாய் 3000 கோடிகளைக் கடந்துள்ளது. இதனால் நேஷ்னல் கிரஷ் மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் குயினாகவும் ராஷ்மிகா மந்தனா மாறியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவைப் பொறுத்தவரையில் மிகவும் சிரமப்பட்டு சினிமாவிற்குள் நுழைந்திருந்தாலும், சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் முன்னர், அவரை பல தயாரிப்பு நிறுவனங்கள் உருவக்கேலி செய்துள்ளது. குறிப்பாக அவரது உயரம், முக அமைப்பு குறித்து ராஷ்மிகாவின் காதுபடவே, மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்கள். ஆனாலும் தன் மீது இருந்த நம்பிக்கையில் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த ராஷ்மிகா இன்றைக்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் இல்லாமல், இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார். மேலும், மிகவும் பிசியான ஆர்ட்டிஸ்டாக மாறிவிட்டார்.

rashmika mandanna animal pushpa 2 2

தனது தொடக்க கால சினிமாக்களில் அதிகம் காதல் படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, அதன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தையே உருவாக்கி வைத்துக் கொண்டார். அதனால்தான் ரசிகர்கள் அவரை நேஷ்னல் கிரஷ் என அழைக்கத் தொடங்கினர். மொல்ல மெல்ல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட் ஆன ராஷ்மிகா, தெலுங்கு சினிமாவின் டாப் கதாநாயகியாக மாறினார். புஷ்பா படத்தின் முதல் பாகம் அவரை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது. அதன் பின்னர்தான் தமிழ் சினிமாவில் விஜய்யுடன் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆனார். அதற்கு தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜும் ஒரு காரணம் என்றாலும், விஜய்க்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு வாரிசு படத்தில் அட்டகாசமாக நடனமாடியிருந்தார்.

தமிழ், ஹிந்தி: வாரிசு படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 3000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அதன் பின்னர், இவரது நடிப்பில் வெளியான ஹிந்தி படம் அனிமல். இந்தப் படத்தின் மூலம்தான் ராஷ்மிகா மந்தனா, ஹிந்தி திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்தின் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த இவர், ஓவர் கிளாமராக நடித்தார். ஹிந்தி திரையுலகில் தனது அறிமுகப் படத்திலேயே இந்த அளவுக்கு கிளாமராக நடிக்கின்றாரே என்ற கேள்வி திரையுலகினருக்கு இருந்தது. கிளாமர் காட்சிகள் மட்டும் இல்லாமல், படுக்கை அறைக் காட்சிகளிலும் அசால்ட்டாக நடித்திருந்தார். இவரது கிளாமர் காட்சிகளைப் பார்க்கவே, ஒரு கூட்டம் தியேட்டருக்கு விசிட் அடித்தது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 900 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.

3000 கோடிகள்: இந்தப் படத்திற்குப் பின்னர் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இப்போதுவரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் குவித்து வரும் படம், புஷ்பா 2. கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்தப் படம், இப்போதுவரை திரையரங்கில் ஓடிக்கொண்டு உள்ளது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூபாய் 1840 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்தப் படத்திலும் தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கிளாமராக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. ராஷ்மிகாவின் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களின் மொத்த வசூலும் ரூபாய் 3000 கோடிகளைக் கடந்துள்ளது. ஒரு பான் இந்தியா ஸ்டாராக ராஷ்மிகா மந்தனா இப்போது பாக்ஸ் ஆபிஸ் குயினாக மாறியுள்ளார். மேலும் அவருக்கான மார்க்கெட் மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X