Rashmika Mandanna: தோனி ஓரம் கட்டிய ராஷ்மிகா.. போகிற போக்கில் கோலி சாதனையையும் உடைச்சுட்டாங்களே!
ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையிலான திருமணம் கடந்த 26ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு சுமார் 3 கிலோ தங்கம் உருக்கப்பட்டு அவற்றின் மூலம் நகைகள் மட்டுமல்லாது, ஆடைகளின் எம்ப்ராய்டிங்கிற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ராஷ்மிகாவின் திருமண புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளார். அதாவது விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் கோப்பையை வாங்கி, அதற்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அந்த புகைப்படத்தை, 22.9 மில்லியன் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

விராட்: ஆனால் ராஷ்மிகா மந்தனா தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்ததை இதுவரை 24.2 மில்லியன் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். இது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. அதேபோல், ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் மகேந்திர சிங் தோனியை ஓரம் கட்டியுள்ளார். அதாவது, மகேந்திர சிங் தோனியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 49.7 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். இப்படி இருக்கையில் ராஷ்மிகா மந்தனாவின் திருமணத்திற்கு முன்னர் அவரைப் பின் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை என்பது, 50 மில்லியனுக்கும் குறைவாகத்தான் இருந்தது.
தோனி: ஆனால் அவரது திருமண புகைப்படங்களை பகிர்ந்த பின்னர் ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதாவது, பிப்ரவரி 28ஆம் தேதி ராஷ்மிகா மந்தனாவின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 50.4 மில்லியனாக உயர்ந்து உள்ளது. இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டும் உள்ளது.

சாதனை: இதனால் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராமில் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்த பின்னர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி என இரண்டு பேரையும் ஓரம் கட்டி உள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இணையத்தில் தற்போது இது பேசு பொருளாகவும் மாறியுள்ளது. அதேபோல் நடிகரும் ராஷ்மிகா மந்தனாவின் கணவருமான நடிகர் விஜய் தேவரகொண்டா பகிர்ந்துள்ள புகைப்படங்களை 19.1 மில்லியன் ரசிகர்கள் பின் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











