ஏ.ஆர்.முருகதாஸ் அப்படி செஞ்சாரு.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.. நேஷன் க்ரஷ்ஷுக்கும் அது நடந்துடுச்சா?

சென்னை: இந்திய திரைத்துறையில் ஃபேமஸான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. பான் இந்தியா அளவில் கலக்கிவரும் அவர் தமிழ் சினிமாவில் மட்டும் ஜொலிக்க முடியாமல் இருக்கிறார். ஆனால் அதற்கும் சேர்த்து மற்ற மொழிகளில் பயங்கர பிஸியாக இருக்கிறார். சல்மான் கானுடன் சிக்கந்தர் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

கர்நாடக திரைத்துறையில் அறிமுகமாகி தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் அவருக்கான வரவேற்பை பலமாக கொடுத்தது. தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் புஷ்பா, புஷ்பா 2 ஆகிய படங்கள் பான் இந்தியா அளவில் வசூலை வாரி குவித்தன. அவர் நடித்த இதர தெலுங்கு படங்களும் ஹிட்டடித்து அவரது மார்க்கெட்டை வலுப்படுத்த; அவரது கொடி உயரவே பறக்கிறது.

பாலிவுட்டில் பிஸி: தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருக்கும் அவர் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார். அங்கும் அவரது திறமைக்கும், அழகுக்கும் ரசிகர்கள் கூட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த அனிமல் படம் சர்ச்சையை சம்பாதித்தாலும் அவருக்கு அழுத்தமான பெயரை பெற்றுக்கொடுத்தது. கடைசியாக தம்மா என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்த அவர் அடுத்ததாக காக்டெயில் 2 படத்தில் நடித்துவருகிறார்.

Rashmika Mandanna Breaks Silence on Sikandar Failure and AR Murugadoss
Photo Credit:

சல்மான் கானுக்கு ஜோடி: இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் படத்திலும் நடித்திருந்தார். படம் பெரிய வரவேற்பை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. நீண்ட காலம் வெற்றியில்லாமல் தடுமாறிய முருகதாஸ் சிக்கந்தரில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல் தோல்வியே கிடைத்தது. அந்தத் தோல்விக்கு சல்மான் கான் தான் காரணம் என்கிற ரீதியில் ஒரு பேட்டி கொடுத்தார் முருகதாஸ். முக்கிய்மாக தாமதமாக வந்தார் என்றும் கூறியிருந்தார்.

சல்மானின் ரிப்ளை: அது பெரிய விவாதமானது. அந்தப் பேட்டி ட்ரெண்டான சமயத்தில் சிவகார்த்திகேயனை வைத்து முருகதாஸ் இயக்கியிருந்த மதராஸி படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அப்போது, 'ஹீரோ சரியான நேரத்துக்கு வந்தும் படம் தோல்வியடைந்துவிட்டதே' என பதிலடி கொடுத்திருந்தார். அது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இப்படி சிக்கந்தரை சுற்றி இயக்குநருக்கும், ஹீரோவுக்கும் உரசல் ஏற்பட ராஷ்மிகாவோ சைலெண்ட் மோடில் இருந்தார்.

ராஷ்மிகாவின் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் சிக்கந்தர் படம் பற்றி பேசுகையில், "சிக்கந்தர் படத்தின் கதையை என்னிடம் சொன்னது வேறு மாதிரி இருந்தது. வேறு மாதிரி எடுத்துவிட்டார்" என்று கூறியிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக, இயக்குநர்கள் கதையை ஒரு மாதிரி சொல்லிவிட்டு வேறு மாதிரி எடுப்பார்கள் என்ற குற்றச்சாட்டு அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் ராஷ்மிகா மந்தனாவுக்கும் அது நடந்திருப்பது வியப்பைத்தான் ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X