விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம்.. முதன்முறையாக வாய் திறந்த ராஷ்மிகா.. நேஷனல் க்ரஷ் சொன்னதை கேளுங்க

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் 26ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அவர்களது திருமண பத்திரிகை புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகியிருந்தன. ஆனால் விஜய் தேவரகொண்டாவோ, ராஷ்மிகாவோ தங்களது திருமணம் பற்றி எதுவும் பேசாமல் இருந்த சூழலில்; முதன்முறையாக நேஷனல் க்ரஷ் மௌனம் கலைத்து பேசியிருக்கிறார்.

இந்திய திரைத்துறையின் ஹெட்லைன்ஸாக மாறியிருக்கிறார்கள் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும். இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்துவந்தார்கள். அதுகுறித்து எவ்வளவு ரகசியமாக வைத்திருக்க முடியுமோ அவ்வளவு ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனாலும் அவர்கள் காதல் குறித்து தொடர்ந்து தகவல்கள் பரவின. சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் கடந்த வருடத்தில் சிம்ப்பிளாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நிச்சயதார்த்தத்தை செய்துகொண்டார்கள்.

Rashmika Mandanna Breaks Silence on Wedding With Vijay Deverakonda Confirms Marriage Buzz
Photo Credit:

26ஆம் தேதி திருமணம்: நிச்சயதார்த்ததை தொடர்ந்து வரும் 26ஆம் தேதி உதய்பூரில் வைத்து திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள். திருமணத்தை முடித்துக்கொண்டு மார்ச் நான்காம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமண ரிசப்ஷனையும் வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் முடித்துவிட்டு அவர்கள் ஒரு வாரம் தேனிலவுக்கும் பிளான் செய்திருக்கிறார்கள். தங்களது ஹனிமூனை உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு சென்று அனுபவிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

பிரமாண்ட ஏற்பாடுகள்: நிச்சயதார்த்தத்தை போல் இல்லாமல் தங்கள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த பிளான் செய்திருக்கிறார்கள். இதில் முகேஷ் அம்பானி, சல்மான் கான், கரண் ஜோஹர், கீர்த்தி சனோன், சந்தீப் ரெட்டி வங்கா என பல பிரபலங்கள் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. முதலில் தங்கள் திருமணத்துக்கு யாரையும் அழைக்க வேண்டாம் என்ற முடிவில் அவர்கள் இருந்ததாகவும்; ஆனால் இப்போது ராஷ்மிகா பான் இந்தியா ஹீரோயினாக மாறிவிட்டதால்; அப்படி செய்வது முறையல்ல என முடிவு செய்து பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து பவுன்சர்கள்: இந்தத் திருமணத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் வெளிநாடுகளில் இருந்து கிட்டத்தட்ட நூறு பவுன்சர்களை திருமண ஜோடி களமிறக்கியிருக்கிறார்களாம். அதேபோல் விழாவில் கலந்துகொள்பவர்கள் யாரும் மொபைல் ஃபோனை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்படி அவர்கள் திருமண பற்றிய பேச்சுத்தான் அதிகம் ஓடுகிறது. ஆனால் அவர்களோ தங்கள் திருமணம் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தார்கள். இன்னும் நான்கு நாட்களே இருக்கும் சூழலில் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் இருப்பது ரசிகர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது.

ராஷ்மிகா சொன்னது: இந்நிலையில் தனது திருமணம் பற்றி முதன்முறையாக மௌனம் கலைத்திருக்கிறார் ராஷ்மிகா. அதாவது முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று ராஷ்மிகா மந்தனாவை தொடர்பு கொண்டு திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்தது. அதற்கு அவர், 'நன்றி' என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார். இதன் மூலம் இரண்டு பேருக்கும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருப்பது உறுதியாகியிருக்கிறது. தனது திருமணத்தை ராஷ்மிகாவே உறுதி செய்துவிட்டதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். நீண்ட காலம் அவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் எனவும் சோஷியல் மீடியாவில் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X