இது லவ் தானே ஜெஸி..! ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் பீச்ல என்ன செய்றாங்கன்னு பாருங்க..
ஹைதராபாத்: தென்னிந்திய சினிமா உலகில் பலராலும் விரும்பப்படுகிற, ரசிக்கப்படுகிற காதல் ஜோடி என்றால் அது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதல் ஜோடி தான். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ரசிகர்களும் இணையவாசிகளும் தான் இவர்களை காதல் ஜோடி எனக் கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் தங்களது காதல் குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் கொஞ்சம் சஸ்பென்ஸ் மற்றும் கொஞ்சம் சர்ப்ரைஸாக வைத்துள்ளார்கள். இப்படியான நிலையில் இருவரும் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இருவரும் தங்களது புகைப்படங்களை மட்டும் பகிர்ந்துள்ளார்கள். இதனால் ரசிகர்களும் இணையவாசிகளும் இருவரையும் லைட்டாக கிண்டல் செய்து வருகிறார்கள்.
ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் இருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர். இவரும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து நடித்த படங்கள் வேற லெவலில் ஹிட் அடித்தது. மேலும் திரையில் அவர்களின் ரொமான்ஸ் ரசிகர்கள் ரசிக்கும் படியாக இருந்தது. இவர்கள் இருவருக்கு உள்ளும் நல்ல பிணைப்பு ஏற்பட்டது. இருவரும் இணைந்து தொடர்ந்து படங்களில் நடிக்க நடிக்க, இருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு லைட்டாக கிளம்பியது.

விஜய் தேவரகொண்டா: ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் காதலிக்கிறார்கள், ஒன்றாக டேட்டிங் செல்கிறார்கள், இணைந்து அவுட்டிங் செல்கிறார்கள் என்ற தகவல்களும் அவ்வப்போது புகைப்படங்களும் வெளியாகிக் கொண்டே இருந்தது. இதில் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள் அவர்களின் காதலை உறுதி செய்து வந்தது. மேலும், புஷ்பா 2 படத்தின் புரோமோஷனின் போது தனது காதலுக்குறியவரின் பெயர் ஆங்கிலத்தில் 'V' என்ற எழுத்தில் தொடங்கும் எனக் கூறினார். இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதாவது ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டாவுடனான தனது காதலை உறுதி செய்துள்ளார் என அரங்கம் அதிர ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள்.
ராஷ்மிகா பிறந்தநாள்: இப்படியான நிலையில் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடற்கரையில் தாங்கள் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்கள். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இருவரும் தங்களது புகைப்படங்களை மட்டுமே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்கள். இது மட்டும் இல்லாமல், நேற்று அதாவது, ஏப்ரல் 5ஆம் தேதி ராஷ்மிகா மந்தனாவின் பிறந்த நாள் என்பதால் இருவரும் வெளிநாட்டிற்குச் சென்று பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்கள், அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இவை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். மேலும், ஒரு நாள் முன் பின் என புகைப்படங்களை வெளியிடாமல் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களையே பகிர்ந்திருக்கலாம் எனவும் பேசி வருகிறார்கள்.

நேஷனல் கிரஷ்: ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ்ஷாக அறியப்படும் காலத்தில் இருந்து சினிமா உலகில் அவருக்கான மார்க்கெட் என்பது தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே உள்ளது. தென்னிந்தியாவில் தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, அனிமல் படத்தின் மூலம் இந்திக்கு சென்றார். கடந்த மாதத்தில் இவரது நடிப்பில் சாவா படம் ஹிந்தியில் வெளியானது. கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படம் இவர் பான் இந்தியா ஸ்டாராக மாற்றியது. ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது மட்டும் இல்லாமல், விஜய் தேவரகொண்டாவும் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், படங்களைத் தயாரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











