அது பொணமா?.. பணமா?.. குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ரோல் இவ்ளோ வெறித்தனமா இருக்கே!

சென்னை: வாத்தி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் மீண்டும் தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்துள்ள நடிகர் தனுஷ் சமீப காலமாக டோலிவுட்டில் தொடர்ந்து படங்களை செய்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் குபேரா படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கி வருகிறார்.

குபேரா படத்திலிருந்து ஏற்கனவே தனுஷின் தோற்றம் மற்றும் நாகார்ஜுனாவின் கதாபாத்திர வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அடுத்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனா கதாபாத்திர வீடியோ தற்போது வெளியானது.

Rashmika Mandanna Kubera Dhanush

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனா இப்படி ஒரு கதாபாத்திரமா என வியந்து போய் உள்ளனர். ஹீரோயின்களை வெறும் டூயட் பாடல்களுக்கு மற்றும் கவர்ச்சி காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில், ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது தெளிவாகியுள்ளது.

பிச்சைக்கார தனுஷ்: குபேரா படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக தோற்றம் அளிக்கும் ஃபர்ஸ்ட் லுக் காட்சி வெளியானது. வசதிக்காக ஏங்கி தவிக்கும் நபராக தனுஷ் குபேரா படத்தில் நடித்து வருகிறார் என்கின்றனர். சேகர் கமுலா இயக்கத்தில் உருவாகியது வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணக்கார நாகார்ஜுனா: பிச்சைக்காரன் போல தனுஷை காட்டிய நிலையில் பணத்தின் மீது ஆசை இல்லாத பெரும் பணக்காரராக நாகார்ஜுனாவை காட்டியுள்ளனர். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பணத்தாசை பிடித்த ராஷ்மிகா: குபேரா படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் காட்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா பிணக்குழி ஒன்றை தோண்டி எடுத்து அதில் இருக்கும் பணப்பெட்டியை பேராசையுடன் தூக்கிச் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. ராஷ்மிகா மந்தனா தனுஷுடன் வெறும் டூயட் மட்டும் பாடி நடிக்கவில்லை என்றும் அவருடைய கதாபாத்திரத்தை சேகர் கமுலா வெயிட்டாகவே எழுதியுள்ளார் என்பது இந்த காட்சியை பார்த்தாலே தெரிகிறது என ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

சந்திரமுகி: பெட்டியை திறந்து பணத்தை பார்த்ததும் ராஷ்மிகா மந்தனா அப்படியே சந்திரமுகியாக மாறிவிட்டார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சல்மான்கானின் சிக்கந்தர், தனுஷின் குபேரா மற்றும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 என வரிசையாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பெரிய பெரிய படங்கள் ரெடியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X