என்ன அழகு.. எத்தனை அழகு.. சித்திரம் போல ஜொலிக்கும் ரஷ்மிகா மந்தனா!

சென்னை : நேஷ்னல் கிரஸ் என அன்போடு அழைக்கப்படும் நடிகை ரஷ்மிகா மந்தனா இப்பொழுது கொள்ளை அழகுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது

தமிழில் சுல்தான் திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த திரைப்படத்தில் ஜோடியாக நடிப்பார் என எதிர் பார்க்கப்படும் நிலையில் இப்பொழுது இவரின் மார்க்கெட் எங்கேயோ சென்றுள்ளது.

அறிமுகமான குறுகிய காலத்திலேயே உயரிய இடத்தை எட்டியுள்ள ரஷ்மிகா சேலையில் சிலைப் போல அம்சமாக உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது பெண்ணா அல்லது ஓவியமா என வியந்து பார்த்து வருகின்றனர்.

தமிழில் நேரடி திரைப்படம்

தமிழில் நேரடி திரைப்படம்

நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழில் நேரடி திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத போதும் பெரும் ரசிகர் கூட்டம் தமிழில் இருந்து வருகிறது.

முன்னணி கதாநாயகியும்

முன்னணி கதாநாயகியும்

சரிலெரு நீகேவ்வாரு என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை தொடர்ந்து இப்பொழுது அல்லு அர்ஜுனுடன் இணைந்து " புஷ்பா " திரைப்படத்தில் நடித்து வர அதில் மற்றுமொரு முன்னணி கதாநாயகியும் இவருடன் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரம்மாண்ட திரைப்படத்தில்

பிரம்மாண்ட திரைப்படத்தில்

தெலுங்கு, கன்னட மொழிகளில் மட்டுமே நடித்து வந்த இவர் தமிழில் எப்போது அறிமுகம் ஆவார் என எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

பெண்ணா அல்லது ஓவியமா

பெண்ணா அல்லது ஓவியமா

சுல்தான் திரைப்படத்தில் வேலைகள் அனைத்தும் முடிந்து விரைவில் ரிலீசாக தயாராக உள்ள நிலையில் இவர் அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வர சமீபத்தில் நேஷ்னல் கிரஸ் என பிரபல கூகுள் நிறுவனத்தால் புகழப்பட்டதை அடுத்து இப்பொழுது ஸ்லீவ்லஸ் ஜாக்கெட்டில் சேலை கட்டி சிலைப் போல அம்சமாக உட்கார்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டதை அடுத்து இது பெண்ணா அல்லது ஓவியமா என ரசிகர்கள் வியந்து பார்த்து என்ன அழகு எத்தனை அழகு என பாட்டு பாடி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X