சூர்யாவா இருந்தா என்ன?.. எனக்கு தேவை அதுதான்.. கேட்டத வைங்க.. ராஷ்மிகாவின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் இதுவா?
சென்னை: நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹிந்தியில் இன்னொரு ஹிட்டை பார்சல் செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தச் சூழலில் சூர்யா பட வாய்ப்பு அவருக்கு சென்றதாகவும் அதற்கு நோ சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது அழகையும், நடிப்பையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் ராஷ்மிகாவும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். அதனையடுத்து டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவுக்கென்ற ரசிகர்கள் குறையவில்லை. தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் ராஷ்மிகா: தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்திருப்பதால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என கணக்கு போட்டார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
நேஷனல் க்ரஷ்: தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள். கடைசியாக அவர் அனிமல் படத்தில் நடித்தார். படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. ராஷ்மிகாவும் ஓவர் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
அடுத்தடுத்த வாய்ப்புகள்: ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு அனிமல் படத்தில் பாராட்டையும் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் ஹிட்டால் அவர் சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்தார் ராஷ்மிகா. அனிமல் படத்தின் ஹிட்டால் ஹிந்தியில் அவருக்கு மேலும் சில பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா பட வாய்ப்பு: சூழல் இப்படி இருக்க தமிழிலும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் ராஷ்மிகா. அவரது ஆசை நிறைவேறும் விதமாக சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியும் உருவாகவிருக்கும் புறநானூறு படத்தில் நடிப்பதற்கு அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்; அதற்கு ராஷ்மிகா மந்தனா வைத்த கண்டிஷனை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது ராஷ்மிகா இப்போது இந்திய அளவில் பிரபலமாக இருக்கிறார். எனவே அவரை புறநானூறு படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தால் படத்துக்கு மேற்கொண்டு ஸ்டார் வேல்யூ கூடும் என்ற நினைப்பில் படக்குழு அவரை அணுகியதாம். அதற்கு அவரோ மூன்று கோடி ரூபாய் சம்பளம் வேண்டும். அதிலிருந்து ஒரு ரூபாய் குறைக்கமாட்டேன் என்று கறாராக கூறிவிட்டாராம்.
படக்குழு எவ்வளவு பேசிப்பார்த்தும் தன் நிலையிலிருந்து இறங்க மறுத்துவிட்டதால் அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை நடிக்க வைக்க புறநானூறு குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட திரையுலகம்; சூர்யா தமிழில் பெரிய ஸ்டார். ஆனாலும் தனக்கு சம்பளம்தான் முக்கியம் என்று விடாப்பிடியாக இந்தப் பெண் நின்றால் எப்படி தமிழில் பெரிய ரவுண்டு வர முடியும் என முணுமுணுத்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











