ராஷ்மிகா மந்தனா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எப்படி இருக்காரு பாருங்க.. முதல் பட ஆடிஷன் வீடியோ!

பெங்களூர்: கன்னட திரையுலகில் ரக்‌ஷித் ஷெட்டி நடித்து வெளியான கிரிக் பார்ட்டி படத்தில் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த 2016ம் ஆண்டு அந்த படம் வெளியானது. ஆனால், அதற்கு முன்னதாக ஒரு படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா முதன்முதலில் நடத்திய ஆடிஷன் வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

28 வயதாகும் நடிகை ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா ஹீரோயினாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். தமிழில் தனுஷ் உடன் குபேரா, தெலுங்கில் அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2 மற்றும் இந்தியில் சல்மான் கான் உடன் சிக்கந்தர் என ஒவ்வொரு ஸ்டேட்டிலும் ஒரு பெரிய படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

rashmika mandanna heroine pushpa 2


சினிமாவில் வருவதற்கு முன்னதாக ராஷ்மிகா மந்தனா கோபிலோலா எனும் கன்னட படத்திற்கு ஆடிஷன் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் ராஷ்மிகாவை ஹீரோயினாக ஆக்காத அந்த படம் இத்தனை ஆண்டுகள் தாமதமாகி இந்த வாரம் வெளியாகப் போவது என்பது தான்.

ராஷ்மிகா மந்தனாவின் முதல் ஆடிஷன்: 1996ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பெங்களூரில் பிறந்த ராஷ்மிகா மந்தனா கல்லூரி படிப்பை முடித்த கையோடு மாடலிங் துறையிலும் சினிமாவிலும் நடிக்க போராடிக் கொண்டிருந்தார். 2015ம் ஆண்டு கோபிலோலா எனும் படத்தில் ஹீரோயினாக நடிக்க அவர் நடத்திய முதல் ஆடிஷன் வீடியோ இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.

நடித்துக் காட்டும் ராஷ்மிகா: அந்த வீடியோவில் ராஷ்மிகா மந்தனா நடித்தும் நடனமாடியும் காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு டிரெஸ்ஸுக்கு 2 டிரெஸ் மாற்றி ஆடிஷனில் ராஷ்மிகா மந்தனா ஆடிப் பாடி நடித்துக் காட்டுகிறார். ஆனால், அந்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதுவும் நல்ல விஷயம் தான் என்றும் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்த ராஷ்மிகா கீதா கோவிந்தம் படத்தின் மூலம் நேஷ்னல் கிரஷ்ஷாக மாறி மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவ்வரு, சுல்தான், புஷ்பா, வாரிசு, அனிமல் என அடுத்தடுத்து தனது ரேஞ்சையே மாற்றி விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அப்பவே அவ்ளோ க்யூட்: கிரிக் பார்ட்டி படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே ராஷ்மிகா மந்தனா 19 வயதில் எந்தளவுக்கு க்யூட்டா இருக்காருன்னு பாருங்க என அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அந்த முதல் படத்துக்காக ராஷ்மிகா மந்தனா நடத்திய ஆடிஷன் வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த வாரம் தான் ரிலீஸ்: ஆர். ரவிந்திரா இயக்கத்தில் மஞ்சுநாத் அரசு நடிப்பில் பல ஆண்டுகள் கிடப்பில் இருந்த கோபிலோலா திரைப்படம் ஒரு வழியாக வரும் அக்டோபர் 4ம் தேதி திரைக்கு வருகிறது. ராஷ்மிகா மந்தனாவுக்கு பதில் அந்த படத்தில் நிமிஷா கே. சந்திரா எனும் கன்னட நடிகை நடித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், இந்தி என நடிகை ராஷ்மிகா மந்தனா சுமார் 19 படங்களில் நடித்து ரிலீஸ் பார்த்து விட்டார். மேலும், ஒரு 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திறமையானவர்களை யாருமே அணை போட்டு தடுக்க முடியாது என்பதற்கு ராஷ்மிகா மந்தனா ஒரு உதாரணம் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X