Just In
- 44 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 58 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- Sports
ரோகித், கில் சிறப்பான துவக்கத்தை தரணும்... பந்த் தொடர்ந்து ஆடணும்... பாண்டிங் அறிவுரை
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'நல்ல கதை இருந்தா மெயில் பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க..' படம் தயாரிக்கப் போகிறார் ஐடி ரெய்டு ஹீரோயின்!
சென்னை: சமீபத்தில் ஐடி ரெய்டை எதிர்கொண்ட ஹீரோயின், படம் தயாரிக்கக் கதை கேட்டிருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் சலோ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
அவருக்கு வரவேற்பு கிடைத்தது. பின்னர், விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது சூப்பர் ஹிட்டானது.

கார்த்தியின் சுல்தான்
பிசியாகி விட்ட ராஷ்மி, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் மூலம் தமிழுக்கும் வந்தார். மகேஷ்பாபுவுடன் இவர் நடித்துள்ள சரிலேரு நீக்கெவரு என்ற தெலுங்கு படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ஹிட்டானது. அடுத்து அவர் நிதினுடன் நடித்த பீஷ்மா என்ற படம் பிப்ரவரில் ஹிட்டாக, நடிகையை பிடிக்க முடியவில்லை. அடுத்து அல்லு அர்ஜூன் ஜோடியாக சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

சூர்யா ஜோடி
இவர், தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இதை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அருவா படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாக இருக்கிறது. மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நல்ல ஸ்கிரிப்ட்
இந்நிலையில் இவர் சமீபத்தில் ட்விட்டரில் மில்லியர் பாலோயர்கள் பேமிலியில் இணைந்தார். இதற்காக ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து இருந்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, படம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக நல்ல ஸ்கிரிப்ட்களை தேடிவருகிறார். இதுபற்றி தனது ட்விட்டரில் அவர் கூறியுள்ளார்.

பொறுமையாக இருங்கள்
ஆர்வமுள்ள இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்கள் நல்ல கதை அல்லது ஐடியா இருந்தால், அதை rashmikareads@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். எனது டீமும் நானும் சரிபார்த்து எது பிடித்திருக்கிறதோ, அது தொடர்பாக உங்களுக்குத் தெரிவிப்போம். நாங்கள் சிறிய குழு. எங்களுடன் பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
வழக்கமாக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்தான் இப்படி கதைகள் இருந்தால் கேட்பார்கள். இப்போது நடிகை ராஷ்மிகா கேட்டுள்ளதால், அவர் படம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.