யம்மாடியோவ்.. இதெல்லாம் டீப் ஃபேக் இல்லை.. ஆஸ்திரேலியாவில் கவர்ச்சி தரிசனம் காட்டிய ராஷ்மிகா மந்தனா!

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா ஆஸ்திரேலியாவில் சுற்றுலா சென்று வந்த நிலையில் அங்கே எடுத்துக் கொண்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. பெங்களூரில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகமானார். அஞ்சனை புத்ரா, சமக் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தவர் தெலுங்கில் சல்லோ எனும் படத்தில் அறிமுகமானார்.

ஆனால், ராஷ்மிகா மந்தனாவுக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது 2018-ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான கீதகோவிந்தம் படம் தான். அந்த படத்தை தொடர்ந்து தேவதாஸ், எஜமானா, டியர் காம்ரேட், சரிலேறு நீக்கு எவரு, பீஷ்மா மற்றும் பொகரு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனாவை தமிழ் சினிமாவுக்கு நடிகர் கார்த்தி சுல்தான் படம் மூலமாக அறிமுகப்படுத்தினார்.

Rashmika Mandanna heroine Deep Fake Pushpa 2 2

சுல்தான் படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் உடன் இணைந்து புஷ்பா படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா இந்தி படங்களின் நடிக்கும் வாய்ப்பு குவிந்தன. கடந்த 2022 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்த குட் பை படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

தளபதி விஜய்க்கு ஜோடி: கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், கடந்த ஆண்டு இந்தியில் மிஷன் மஜ்னு மற்றும் அனிமல் உள்ளிட்ட படங்களிலும் ராஷ்மிகா மந்தனா நடித்து தூள் கிளப்பினார்.

புஷ்பா 2 வருது: ஆகஸ்ட் 15-ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தள்ளிப்போகும் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் இதுவரை படக்குழுவினர் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரெயின்போ, தி கேர்ள் ஃப்ரெண்ட், குபேரா உள்ளிட்ட படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் படத்திலும் இவர் தான் நடித்து வருகிறார்.

ஆஸ்திரேலியா டூர்: சமீப காலமாக ஜப்பான், ஆஸ்திரேலியா என உலக நாடுகளுக்கு ஜாலி டூர் சென்று வருகிறார் ராஷ்மிகா மந்தனா. மஞ்சள் நிற கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு ஆஸ்திரேலியாவில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

இது டீப் ஃபேக் கிடையாது: ராஷ்மிகா மந்தனாவின் தாராளக் கிளாமரை பார்த்த ரசிகர்கள் இதாவது ஒரிஜினலா அல்லது இதுவும் டீப் ஃபேக்கா என கலாய்த்து வருகின்றனர். ஆனால், இது டீப் ஃபேக் கிடையாது என்றும் ஒரிஜினல் தான் என்றும் இதுதான் ராஷ்மிகா மந்தனாவின் உண்மையான அழகு என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். சமீப காலமாக ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் டீப் ஃபேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் செகண்ட் சிங்கிளான "சூடான தீ கங்கு மாதிரி" பாடலுக்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் சீரியல் பிரபலங்கள் என பலரும் ரீல்ஸ் போட்டு வருகின்றனர். அந்த பாடலும் 100 மில்லியன் வியூஸை கடந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X