ஆத்தாடி..107 கிலோவா?..ராஷ்மிகாவை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்.. குவியும் பாராட்டு!
சென்னை : தாறுமாறான அழகு, சுண்டி இழுக்கும் உடல்வாகு என ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் ராஷ்மிகா மந்தனா. எக்ஸ்பிரஷன் குயினாக வலம் வரும் ராஷ்மிகா நேஷனல் க்ரஷ் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
Recommended Video
சமீபத்தில் வெளியான சீதா ராமம் படத்தில் சிறப்பான கேரக்டரில் ராஷ்மிகா நடித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றி அவரது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
பல திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலக்கலான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தானா
கிரிக் பார்ட்டி என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு செம கவர்ச்சியாக நடித்திருந்தார். அதுவும், வா சாமி பாடலுக்கு அம்மணி ஆடிய ஆட்டம் பல ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்தது.

படு பிஸி
நடிகை ராஷ்மிகா, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார். தற்போது அமிதாப் பச்சனுடன் குட்பை திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரன்பிர் கபூருடன் அனிமல் படத்திலும் புஷ்பா 2 திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

வாரிசு
தளபதியின் தீவிர ரசிகையான ராஷ்மிகா தளபதி66 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறா. ஸ்ரீ வெங்கடேஷ்வரா தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வாரிசு படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் நடித்து வருவதான் மூலம் ராஷ்மிகாவின் நீண்டநாள் ஆசை நிறைவேறி உள்ளது.

107 கிலோ
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்பில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 107 கிலோ வெயிட்டை அசால்டாக தூக்கி உள்ளார் ராஷ்மிகா மந்தானா. அது மட்டுமின்றி இறுதியில் உற்சாகத்தில் ஆடும் வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி 107 கிலோவா வெயிட்டை தூக்கிட்டீங்களே என அவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











