Rashmika Mandanna: அச்சச்சோ.. இப்படி ஆகிடுச்சே.. வெளியே முகத்தை காட்ட முடியாமல் தவிக்கும் ராஷ்மிகா!

சென்னை: பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு திரையுலகில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடிக்க ஆரம்பித்த அவருக்கு கீதா கோவிந்தம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி கோலிவுட் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.

Rashmika Mandanna hide her face for this reason stuns fans

தெலுங்கு திரையுலகத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கார்த்தியுடன் ஜோடி போட்டு சுல்தான் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா தளபதி விஜய்யுடன் கடந்த ஆண்டு வெளியான வாரிசு படத்திலும் நடித்திருந்தார்.

Rashmika Mandanna hide her face for this reason stuns fans

இந்தியில் மிகப்பெரிய வரவேற்பு: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வாரிசு படம் வெளியாகி 300 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், பாலிவுட்டில் டிசம்பர் மாதம் வெளியான அனிமல் திரைப்படம் 900 கோடி ரூபாய் வசூல் ஈட்டி ராஷ்மிகா மந்தனாவிற்கு இந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இனிமேல் தென்னிந்தியா பக்கம் ராஷ்மிகா வருவது சந்தேகம் தான் என்கிற அளவுக்கு அடுத்தடுத்து பாலிவுட் படங்கள் குவிந்து வருகின்றன.

Rashmika Mandanna hide her face for this reason stuns fans

முகம் காட்ட முடியாத நிலை: அனிமல் திரைப்படத்திற்கு அதிகப்படியான ஆதரவும் அதைவிட அதிகமாக எதிர்ப்புகளும் குவிந்துள்ளன. கடந்த ஆண்டு பாலிவுட்டுக்கு நயன்தாரா மற்றும் ராஷ்மிகா உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகள் பெரிய படங்களில் நடித்திருந்தனர். நயன்தாரா தாதாசாகிப் பால்கே விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார். ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் ராஷ்மிகா மந்தனா நாமினேட் கூட ஆகவில்லை. இந்நிலையில் தற்போது வெளியே முகம் காட்ட முடியாத நிலையில், அவர் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Rashmika Mandanna hide her face for this reason stuns fans

புதிய லுக்: நடிகை ராஷ்மிகா மந்தனா சன்டே அதுவுமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தனது முகத்தை மட்டும் காட்டாமல் செல்போனை வைத்து செல்ஃபி எடுப்பது போன்ற போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்றால் புது படத்திற்காக புதிய லுக்கில் தான் தயாராகி வருவதாக கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் ராஷ்மிகா மந்தனாவால் இப்போதைக்கு வெளியே முகம் காட்ட முடியாது என்கின்றனர்.

Rashmika Mandanna hide her face for this reason stuns fans

புஷ்பா 2 முதல் இத்தனை படங்களா: கடந்த ஆண்டு வாரிசு, மிஷின் மஜ்னு மற்றும் அனிமல் என மூன்று படங்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டும் ராஷ்மிகா மந்தனா கைவசம் பல படங்கள் உள்ளன. அல்லு அர்ஜுன் உடன் அவர் இணைந்து ந வரும் புஷ்பா 2, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ரெயின்போ, தெலுங்கில் உருவாகி வரும் தி கேர்ள் ஃபிரண்ட் மற்றும் இந்தியில் உருவாகி வரும் சாவா உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கின்றன. இதில் எந்த படத்திற்காக ராஷ்மிகா மந்தனா வித்தியாசமான தோற்றத்தில் தன்னை பயன்படுத்திக் கொண்டு வருகிறார் என்பதை அவர் அறிவிக்கவில்லை. அந்த செல்ஃபிக்களை பார்த்தால் எப்படியும் கண் பகுதியில் தான் மாற்றங்களை அவர் செய்து வருகிறார் என தெரிகிறது. கூடிய சீக்கிரமே லுக் லீக் ஆகிவிடும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X