என்னது ராஷ்மிகா மந்தனா சம்பளம் இவ்வளவா?.. நயன்தாராவை ஓவர் டேக் செய்துட்டாரோ?

சென்னை: நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹிந்தியில் இன்னொரு ஹிட்டை பார்சல் செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தச் சூழலில் அவர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். தொடர்ந்து டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவுக்கென்ற ரசிகர்கள் குறையவில்லை. தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

Rashmika Mandanna Nayanthara

ஏமாந்த ராஷ்மிகா: தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்திருந்ததால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என எதிர்பார்த்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

நேஷனல் க்ரஷ்: தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள். கடைசியாக அவர் அனிமல் படத்தில் நடித்தார். படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. ராஷ்மிகாவும் ஓவர் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்: ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு அனிமல் படத்தில் பாராட்டையும் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் ஹிட்டால் அவர் சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அவருக்கு வேறு சில வாய்ப்புகளும் ஹிந்தியில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் ராஷ்மிகாதான் ஹீரோயின். அதனை சில மாதங்களுக்கு முன்பு அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குபேரா: இதற்கிடையே தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா. தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் திணறும் ராஷ்மிகா; குபேரா படத்தின் மூலம் அந்த இடத்தை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். மேலும் புஷ்பா 2 படத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படம் டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

புதிய தகவல்: முக்கியமாக சல்மான் கானுக்கு ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை 13 கோடி ரூபாயாக ஃபிக்ஸ் செய்திருக்கிறாராம். ஒருவேளை இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நயன்தாராவை ராஷ்மிகா ஓவர் டேக் செய்துவிட்டார் என்று சொல்லலாம். ஏனெனில் நயன் இப்போது 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சில வாரங்களுக்கு முன்பு ராஷ்மிகா தனது சம்பளத்தை 4 கோடி ரூபாய் ஏற்றியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதனை ராஷ்மிகா திட்டவட்டமாக மறுத்தார். அதன் காரணமாக இப்போது 5 கோடி ரூபாய் சம்பளம் ஏற்றியிருப்பதாக கூறப்படும் தகவலில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X